Wednesday, April 1, 2009

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாப்புலர் ப்ரண்டின் நிலைப்பாடு??




பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மார்ச் 29 அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள்..
மதச்சார்பற்ற கட்சிகளின் பிரிவு பாசிச சக்திகள் அதிக தொகுதிகளில் வெற்றிக்கு வழி வகுக்கும் என வருந்துகிறது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் புதிய மற்றும் மாறுபட்ட திட்டங்களை தங்கள் தேர்தல் அறிக்கயில் அறிவிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது..
மேலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த தேர்தலில் ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினரை கண்டுகொள்ளவில்லை
தமிழகம், கேரள, கர்நாடக, மேற்கு வங்காளம், மணிபூர், ஆந்திரா, ராஜஸ்த்ன், கோவா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு புதிய தேசிய அரசியல் கட்சியினை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபடுள்ளது.. எனினும் ஒரு மாற்று அரசியலுக்கான அடித்தளம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் இந்த மக்களவை தேர்தலில் தேசிய அளவில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எனினும் அந்தந்த மாநில நிலவரத்தை பொறுத்து மாநில நிர்வாகம் முடிவு எடுக்கும்.
சேர்மன் இ. எம். அபிதுர்ரஹ்மான், இ. அபூபக்கர், பி. கோயா, ஏ. சயீத், வி.பி. நாஸ்ருதீன், முஹம்மது அலீ ஜின்னா ஆகியோர் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment