Monday, March 30, 2009

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்
சி.எம்.என். சலீம்

நாட்டின் ஜனாதிபதியால் தேர்வு செளிணியப்படுபவர் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி. இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டின் மிக உயரிய பஞ்சாயத்து அமைப்புகளான பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், போன்றவற்றிற்கு தேர்தல் நடத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் கூட தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு. தேர்தலில் சட்ட திட்டங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளை பதிவு செளிணிவது, போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை நிர்ணயிப்பது, அவர்களுக்கு சின்னம் வழங்குவது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச் சாவடிகளை கண்காணிப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, தகுதியிழக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் பரிந்துரைப்பது, அனைத்து தேர்தல் நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்புதான் பொறுப்பு. சுருங்கச் சொன்னால் இந்தியாவில் வாழும் 110 கோடி மக்களை ஆளுகின்ற வர்க்கத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தேவை ஏற்படின் இடையில்) தேர்வு செய்ய அரசியல் சாசன சட்டம் 324ன் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சிப் பெற்ற அமைப்புதான் இந்த இந்தியத் தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகஷீமீ பட்டியலைப் பார்ப்போம். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இது வரையில் பொறுப்பில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

1. சுகுமார் சென் - 1950 - 1958
2. கே.வி.கே.. சுந்தரம் - 1958 - 1967
3. எஸ்.பி. சென் வர்மா - 1967 - 1972
4. டாக்டர் நாகேந்திர சிங் - 1972 - 1973
5. டி. சாமிநாதன் - 1973 - 1977
6. எஸ்.கே. ஷாக்தார் - 1977 - 1982
7. ஆர்.கே. திரிவேதி - 1982 - 1985
8. ஆர்.வி.எஸ். பெரிசாஸ்திரி - 1986 - 1990
9. வி.எஸ். ரமாதேவி - 1990 நவ26 - டிச 26வரை.
10. டி.என். சேசன் - 1990 - 1996
11. எம்.எஸ். கில் - 1996 - 2001
12. ஜே.எம். லிங்டோ - 2001 - 2004
13. டி.எஸ். கிருட்டிணமூர்த்தி - 2004 - 2005
14. பி.பி. டாண்டன் - 2005 - 2006
15. என். கோபாலசாமி - 2006 - இன்று வரை

நாடு விடுதலை பெற்று 61 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளில் இதுவரையிலும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக உஷீமீள முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர்
கூட நியமிக்கப்படவில்லையே ஏன்? இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கு ஏற்ற தகுதி மிக்கவர்களாக முஸ்லிம் சமூகத்தவர் போதுமான அளவில் இருந்தும் மத்திய அரசின் உயர் பதவிகளில் கூட நியமிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு அதிர்ச்சித் தகவலும் உண்டு. மத்திய அரசின் துறை வாரியான செயலகங்கள் மொத்தம் 83. இதில் தற்போது செயலர்களாக இருப்பவர்களில் ஒரு முஸ்லிமையும் நியமிக்கவில்லை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் இடம் பெற வேண்டும். அப்படி இடம் பெற்றால் தான் அது ஒரு முழுமை பெற்ற ஜனநாயகமாகத் திகழும். தேசிய நீரோட்டத்தில் பங்களிப்பு செளிணியாத எந்த சமூகமும் காலப் போக்கில் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். அத்தகைய நிலையில் தான் இன்றைய முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம்கள் கால மாற்றத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


இனி வருங்காலங்களில் இது போன்ற நிலையிலிருந்து மாற வேண்டும். இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் வேட்கையையும் இளம் உள்ளங்களில் விதைத்திட வேண்டும். அவர்களுக்கு வழிக்காட்டிட வேண்டும். அதை இந்தச் சமூகமும் சமூக ஆர்வலர்களும் தான் செய்ய வேண்டும்.

Sunday, March 29, 2009

குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர்!!

குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர்!!

60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கழிப்பறை கட்டியதில் தான் முன்னேறி இருக்கிறார்கள். மற்ற துறைகளில் தலித்களை விட கல்வி வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மிக மிக பின்தங்கி உள்ளனர் என்று சச்சார் கமிட்டி கூறியது. இதற்கு காரணம் நம் சமுதாயத் தலைவர்களின் தகுதியற்ற தலைமைத்தனமும், நான் என்ற கர்வம், தலைக்கனம் என்ற பிரண்ட் லைன் பத்திரிக்கை செய்தியை மறந்து விட முடியாது. எத்தனை அமைப்புகள் ஆரவாரத்தோடு புறப்பட்டதோ அத்துனை அமைப்புகளும் விழலுக்கு இறைத்த நீராய் வீரியமில்லாமல் வீழ்ந்து கிடக்கின்றனர். சதிக்கார அரசியல் கட்சிகளின் உருட்டல் மிரட்டல்களில் தேர்தல் ஆதரவு, தேர்தல் புறக்கணிப்பு, அந்தர் பல்டி, முன்பு இருந்த இடஒதுக்கீட்டைப் பறித்துக் கொண்ட துரோகத்திற்கு பாராட்டு விழா, சிறைநிறப்பு போராட்டத்தின் வெற்றி, இரண்டு சீட்டுக்கு கூன்பிறையாய் கூனிநின்ற காட்சி இவர்களின் கேலி கூத்துக்களை எழுதினால் ஏடு தாங்காது.

புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்பர். இவர்களோ, சுயநலத்தை முன்நிறுத்தி சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக்கொண்டு சமுதாயத்தை ஏய்ப்பவர்களாக இருக்கின்றனர். மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையில் சர்க்கஸ் கோமாளிகளாக சமுதாயத்தை காட்சி அளிக்க வைத்தனர். ஆன்மீகத்தையும், அரசியலையும் குழப்பி குழப்பத்தின் மொத்த உருவமாய்க் காட்சியளிக்கின்றனர். சமுதாயத்தில் இளைஞர்கள் சமுதாய இயக்கங்களின் குழப்பத்தைக் கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளிலே தஞ்சம் புகுந்து உள்ளனர். இதை மாற்றிட கூட்டு முயற்சியில் இந்திய தேசிய மக்கள் கட்சியை சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, சமுதாய எண்ணங்கள் உணர்வுகளை புரிந்து தலித், கிருஸ்த்துவ, முஸ்லிம்களை அரவணைத்து சென்றிட முதல் பொது அரசியல் கட்சியை (IDMK)யை உருவாக்கி தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலைகளை முடித்து, சென்னையில் தலைமையகம் அமைத்து சமுதாயத்தின் பலதரப்பட்ட அமைப்புகள், சங்கங்கள், ஆலிம்கள், இளைஞர்கள், புரவலர்கள், ஜமாத் பொருப்பாளர்களை எல்லாம் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து நம் சமுதாய உள்ளத்து உணர்வுகளை துண்டு பிரசுரம் மூலமாக சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற இயக்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து எதிர்கால தேர்தலைக் கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிட முயற்சி செய்யும் போது, ஆம், கனிபறிக்க மரம் ஏறும்போது கருநாகம் காலைச் சுற்றுமாம், அது போன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவறவிட்டு விட்டு மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க, சமூகத்தை அடகு வைக்க, அரசியல் குழப்பம் செய்ய வருகின்றனர்.

இளைஞர்களே எச்சரிக்கை, ஜமாத்தார்களே, சமுதாய இளைஞர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ளநரி செயல்கள் ஒடுங்கட்டும்,


அதன் மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும். மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித்தன்மை தமிழ் தரணியில் சிறக்கட்டும். வருங்கால சந்ததிகள் நம்மை போற்றட்டும்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
9940421595 - 9344510369 - 9443021050

அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி? - நாளை முடிவு

சென்னை: திமுகவில் சீட் இல்லாமல் விடப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவுதான் மனித நேய மக்கள் கட்சி. இக்கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஏகப்பட்ட சீட் தர வேண்டும் என இக்கட்சி கோரி வந்தது. ஒரு சீட் தந்தால் ஏற்க மாட்டோம் எனவும் கூறியிருந்தது.

ஆனால் திமுக இக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சிக்கே ஒரு சீட் மட்டும்தான் திமுக தந்துள்ளது. இந்த நிலையில் புதிதாகப் பிறந்த மனித நேயக் கட்சிக்கு இத்தனை சீட் தர முடியாது என திமுக கூறி விட்டதாம்.

இதனால் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த இறுதிக் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மனித நேயக் கட்சியைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் கூட்டம் சென்னையில் நாளை மாலை நடக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது இதுகுறித்துக் கூறுகையில்,

மாறிவரும் தமிழக அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மனித நேயமக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட விருக்கிறது. எந்த நிலையிலும் தன்மான அரசியலை மனித நேய மக்கள் கட்சி விட்டுக்கொடுக்காது என்பதை தொண்டர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அப்துல் சமது.

அதிமுக தரப்பில் கூட்டணி குறித்து மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்

முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?

பெரியார் பேசுகிறார்


இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது
- I

('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)
Periyar

தோழர்களே!

எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.


இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.

ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.

இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.


ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.


இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.



அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.


சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.


சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!


எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!தொடரும்.....

Friday, March 27, 2009

தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்

சவூதி அரேபியா - தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்



சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலமாக திகழக் கூடிய தம்மாம் மாநகரில் தமிழக முஸ்லிம் லீகர்களின் காயிதெ மில்லத் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் கேரள முஸ்லிம் லீகர்களின் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கம் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் தம்மாம் - பதர் பாலி கிளினிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல தலைவர் எம். உம்மர் தலைமை தாங்கினார்.

எதிர்வரும் இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அது ஆதரிக்கக் கூடிய அணிக் காக சவூதி அரேபியாவிலிருந்து எவ்வாறு பிரச்சார உத்திகளை மேற்கொள்வது குறித்தும், தம்மாம் மண்டபத்தில் பணியாற்றி வரு கின்ற தமிழக முஸ்லிம் களுக்கு மத்தியில் முஸ்லிம் லீகின் காயிதெ மில்லத் பேரவையை வலுப்படுத்து வதற்கான நட வடிக்கைகள் குறித்தும் மற்றும் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல துணைத் தலைவர் குஞ்சு முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை யின் தம்மாம் மண்டல அமைப்பாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, கேரள மாநில இளைஞர் லீகின் மலப்புர மாவட்ட முன்னாள் கன்வீனர் இப்ராஹீம், கடலூர் முஹைதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் நிர்வாகிகள் ஷரீப், சுலைமான், இக்பால் சாஹிப், பதர் பாலி கிளினிக் முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை பொறுப் பாளர்களான கோவை நாசர் ஹம்ஸா, பரங்கிப் பேட்டை கரீமுல்லாஹ், நெல்லை அப்துல் கனி, திவான், அப்துல் காதர், திவான் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தம்மாம் - கதீப் பகுதி கே.எம்.சி.சி. அமைப்பாளர் அப்துல் சமத் நன்றி கூறினார்.

தகவல் . இளம்பிறையான, தம்மாம்

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா -- தேர்தல் நிலைப்பாடு

"அதிகாரம் மக்களுக்கே" என்ற முழக்கத்துடன் மக்களுக்கு நேர்மறை அரசியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் அரசியல் நிலைப்பாடு மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதன் செயல்பாடு குறித்து பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில தலைவர்
முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கை..




Thursday, March 26, 2009

சமுதாயத்தின் செந்நீர்!!

இது கவிதை அல்ல கண்ணீர்!
ஆம், சமுதாயத்தின் செந்நீர்!!


அகண்ட பாரதத்திற்கு அச்சாணி கொடுத்தவனே
அடிமை இந்தியாவில் சிலர் அகல் செய்த போது
விடுதலைக்கு குருதியில் மண்ணை நனைத்தவனே – உன்னை
நீ உணரத் தவறியதால் காற்றுக்கு சாயும் நாணலாய்
மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நிற்கிறாய்

விடுதலைப் புரட்சிக்கு அன்று புதுமை செய்தாய் - இன்றோ
பலர் பார்த்து சிரிக்க தொலைக்காட்சியிலும் வெப் சைட்டிலும் ஈமெயில்களிலும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை அள்ளி வீசுகிறாய்
வாழ்க உம் பணி என்று சொல்ல இதயம் வலிக்கிறது – காரணம்
எம் உதிரத்தின் அங்கமாய் நம்மை இஸ்லாம் இணைத்து இருக்கிறது
கலவரப் பூமியில் கூட கருத்துப் புரட்சி நடக்கிறது இன்று – கருத்துப்
புரட்சியை அரங்கேற்றிய மார்க்கத்தில் அடித்துக் கொண்டு நிற்கிறாய்.

ஒற்றுமைக்கு இலக்கணம் தந்த மார்க்கத்தின் தோழனே
சமூகத்தின் கண்ணீர் கடல் மட்டத்தை தாண்டி விட்டது – நீயோ
வேதனையை மறந்து விட்டு வேற்றுமைக்கு கடை விரிக்கிறாய்
ஒற்றுமை ஒற்றுமை என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் - ஒற்றுமை
என்ற வார்த்தைக் கூட நம்மைப் பார்த்து பரிகசிக்கும்.

திருவிழாவைப் போல் தேர்தல் வருகிறது – எம் தேசத்தில்
திருவோடு தூக்குபவர் எல்லாம் கோட்டையில் கோலோச்சுகின்றனர்
கோட்டை விட்டு விட்டு மண் கோட்டையை
நம் கோட்டை என்கிறார்கள் நம்மவர்கள்
பாவம் தெருவுக்கு தெரு ஒரு கூட்டம் முழக்கம் - நம் உரிமைகள்
எல்லாம் கானல் நீர் போன்ற மயக்கம்.

அரசியலில் பூனைகளே நம்மை மிரட்டுகின்றன
புலி வேகம் காட்டிய அமைப்புகளோ எலிகள் போல் நடுங்குகின்றன
வாழ்க தலைவர்கள் எங்கள் தலைவலிகள்
நமது உரிமைகள், உணர்வுகள் பற்றி உரக்கப் பேசுவார்கள்
நாட்டில் மடம் கட்டும் ஆண்டிகள் கூட தேவலை
பாவம் நமது தலைவர்கள் ஆம் நடிப்பதில் வல்லவர்கள்
முட்டி விட்டு குனிவதையே சாதனை என்று குதிப்பார்கள்.


எத்தனை நாட்கள் பொறுப்பது, பொறுத்துக் கொண்டு புன்மைத்
தேரைகளாக வாழ்வதை விட புது அரசியல் விடிவை தட்டி விட
வாருங்கள் சகோதரர்களே! தலைவர்களை - Sorry! தலைவலிகளை
உதறித் தள்ளுவோம். எதிர்காலத்தை நாமே கட்டமைப்போம்.
இது கவிதை அல்ல, கண்ணீர் - சமூகத்தின் செந்நீர்.
வாருங்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியில் (IDMK);
சங்கமிப்போம்! சீர் பெறுவோம்!

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
9940421595 - 9344510369 - 9443021050

மனித நேய மக்கள் கட்சியை எதிர்க்க ஜமாத்துக்கள் முடிவு

4.மனித நேய மக்கள் கட்சியை எதிர்க்க ஜமாத்துக்கள் முடிவு

உச்சிப்புளி: மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் அதை எதிர்த்து ஜமாத்துக்கள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் கவுரவ ஆலோசகர் அப்துல் நாபிக் கூறுகையில், " லோக்சபா தேர்தலை குறிவைத்து த.மு.மு.க., சார்பில் மனித நேய மக்கள் கட்சி துவக்கப்பட்டது. தி.மு.க., உடன் கூட்டணி ஏற்படுத்தி தொகுதியை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்களுக்கு "சீட்' தருவதை எதிர்த்து தி.மு.க., தலைமைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் ஜமாத்துக்கள் சார்பில் தந்தி அனுப்பியுள்ளோம். ஏதேனும் தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் ம.நே.ம., கட்சிக்கு எதிராக முஸ்லிம் ஜமாத்துக்கள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் தீவிரமாக செயல்படுவர். ராமநாதபுரத்தில் அவர்களது வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் எதிர்த்து ஜமாத்துகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தவும் முடுவு செய்துள்ளோம்' என்றார்.

நன்றி : தினமலர்

ஒரு தொகுதியை ஏற்பதாக இல்லை - ம.ம.க

அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்... ம.ம.க அறிவிப்பு.
அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்...


கடந்த மார்ச் 20 அன்று சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் தாயகத்திலிருந்தபடியே ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி தொலைபேசியில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து...


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன். பாசத்திற்குரிய மனிதநேய சொந்தங்களே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தேசத்தின் எல்லைக் கோடுகள் பிரிந்தாலும், உணர்வுகளால் தாய் மண்ணோடு ஒன்றி வாழும் உங்களிடம் அலைபேசியில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியில் பேசுவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று வெள்ளிக்கிழமை. அரபு நாடுகள் எங்கும் விடுமுறை தினம். வாரம் முழுக்க உழைத்துவிட்டு இந்த ஒருநாள்தான் ஓய்வையும், மகிழ்ச்சியையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. உங்களில் பலர், பலர் என்று சொல்வதை விட அனைவருமே இந்தியாவில் உள்ள உங்கள் பெற்றோரோடு, மனைவியோடு பிள்ளைகளோடு, உடன் பிறப்புகளோடு தொலைபேசியில் பேசி மகிழ்ந்திருப்பீர்கள். அவர்களது கரங்களைத் தொட்டுப் பிடித்து நெஞ்சார கட்டி மகிழ முடியாத வருத்தம் இருந்தாலும், குரலையாவது கேட்டு மகிழ முடிகிறதே என்ற ஒரு சிறு மகிழ்ச்சியில் இன்று திளைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும், நன்றாகவே புரியும்.

காரணம் எனது குடும்பத்திலும் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் அதன் வலியை என்னால் உணர முடியும். இன்று ஜும்ஆ தொழுகையில் நீங்கள் உங்கள் உறவினர்களை சந்தித்திருப்பீர்கள். ஊர் செய்திகளை பரிமாறிக் கொண்டிருப்பீர்கள். நன்றாக மதியம் உறங்குவீர்கள். இப்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை நீங்கள் அனுபவிக்கும் இத்தருணத்தில், சமுதாய உணர்வோடு தாய்நாட்டின் மீதான நேசத்தோடு ஓரிடத்தில் எமது உரையை கேட்பதற்காக கூடியிருக்கிறீர்கள் என்றால், அதுதான் நமது கொள்கை உணர்வு. உணர்வு மட்டுமல்லாமல் நம்மை இணைக்கும் உறவும் அதுதான் என்றால் அது மிகையாகாது.

அன்பார்ந்த சொந்தங்களே... நமது தாய்க்கழகம் தமுமுக கடந்த 14 ஆண்டு காலமாக நம்மை பக்குவப் படுத்தி, அரசியல் எனும் பெருநதியில் நீச்சலடிக்க அனுப்பி வைத்திருக்கிறது. அது சாதாரண நீச்சல் அல்ல... எதிர்நீச் சல்.... அந்த எதிர்நீச்சலில் எப்படி நீந்தப் போகிறோம், எதையெல்லாம் எதிர்கொள்ளப் போகிறோம். அரசியல் சுழற்சிகளையும், சூழ்ச்சிகளையும் எப்படி தாக்குப்பிடிக் கப் போகிறோம் என்பதை நீங்களெல்லாம் கடல்தாண்டி கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

குப்பைகள் நிறைந்து, முடை நாற்றமடிக்கும் அரசிய­ல் இறையருளால், ஈமானிய உறுதியோடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் களமிறங்கி யுள்ளோம். இன்று மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மாபெரும் சக்தியாக உரு வெடுத்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)

கூட்டணியில் நாம் இடம்பெற்றால் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கூடுதல் வாக்குகளைப் பெற்று யாரும் வெற்றிபெற முடியும். சில தொகுதிகளில் 25 ஆயிரம், சில தொகுதி களில் 50 ஆயிரம், சில தொகுதிகளில் 75 ஆயிரம், சில தொகுதிகளில் 1 லட்சம் என நமது வாக்குகள் பரவிக் கிடக்கிறது. எட்டு தொகுதிகளில் இரண்டு லட்சம் தொடங்கி மூன்று லட்சம் வாக்குகள் வரை கொட்டிக் கிடக்கிறது.

இந்த வாக்கு வங்கியை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் ஆசை வார்த்தைகளை வீசியே அறுவடை செய்து கொண்டார்கள். நமது தோளில் ஏறி ஆட்சியைப் பிடித்தார்கள். அமைச்சர் பதவிகளை அடைந்தார்கள்.

நாமோ வாக்களித்தவுடன், வழக்கம் போல் நமது வேலையைப் பார்க்க போய்விட்டோம். இனி அது நடக்காது. பிறருக்காக தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். சொந்த காசை செலவழித்தோம். சுவர்களில் விளம்பரங் களை செய்வதற்காக சண்டை போட்டோம். வீட்டு வேலைகளை போட்டு விட்டு வெயி­ல் திரிந்தோம். வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தோம். தேர்தல் நாளன்று அடிதடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டோம்.

ஆனால், அதிகாரத்தை மட்டும் அடையாமல், அமைதியாக ஓரங்கட்டப்பட்டோம். அந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து இப்போது விடுபட்டிருக்கிறோம்.

எங்களுக்கும் அரசியல் மரியாதை தேவை என எழுந்துவிட்டோம். எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதி களை அடையாளம் காட்டி, குறைந்தது மூன்று அல்லது இரண்டு தொகுதிகளாவது தாருங்கள் என கேட்கிறோம், அடம்பிடிக்கிறோம்.

இதை நமது கட்சியினரும், சமுதாய மக்களும், பிற இன மக்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள். உறுதியாக நில்லுங்கள் என ஆதரவு தருகிறார்கள். நாம் நிலைகுலைய மாட்டோம். வஞ்சக சதிக்கு ப­யாக மாட்டோம்.

நாம் உறங்கும்போது மட்டுமே, நமது நெற்றியில் துப்பாக்கிகளை நீட்ட முடியும். அரசியலில் தூங்கும் போது கூட கால்களை ஆட்டிக் கொண்டே தூங்கினால் தான், பாதுகாப்பாகத் தூங்க முடியும். இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று கூறி அடக்கம் செய்து விடுவார் கள். அவ்வளவு மோசமானது அரசியல். அதுவும் தமிழக அரசியல் மிக மோசமானது.

எனவே நாம் ஒரு தொகுதியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த­ல் ஏற்பதாக இல்லை. இன்னும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளோம். பொறுமை இழக்க மாட்டோம். வேறு வழியில்லை எனில், எதிர் வீட்டுக்காரரோடு பேசுவோம். அதுவும் திருப்தியில்லையெனில், தனித்துப் போட்டியிடுவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் நமது முழு ஒத்துழைப்பையும் காட்டும் வகையில் போட்டியிடுவோம்.

இதனால் நமக்கு இழப்பு வரும். ஆனால், நமது பலத்தை உணராமல் நம்மை மதிக்காதவர்களுக்குத்தான் 15 தொகுதிகளிலாவது பேரிழப்பு ஏற்படும் என்பதை எதிர்காலம் உணர்த்தப் போகிறது.

நாம் இப்போது வெற்றி பெறாவிட்டாலும், வாக்குகளை பிரிப்போம். அது எதிர்காலத்திற்கு உதவும். நமது பேரம் பேசும் வ­மை கூடும். காரணம் நமது கட்சி பொதுவானது. முஸ்லிம்களின் பின்புலத்தில் இயங்கினாலும், அது அனைத்து மத,இனி சாதி மக்களின் ஆதரவைப் பெற்றது. அனைவருக்கும் தொண்டாற்றக் கூடியது.


நமது தாய்க்கழகத்தின் சேவைகளால் ஈர்க்கப்பட்ட அனைத்து மத மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. எனவே அன்பார்ந்த சொந்தங்களே... நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக் கையோடு எங்களுக்காக பிரார்த்தியுங்கள். தாயகத்தில் உள்ள உங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த நம்பிக்கையை, செய்தியை தெரிவியுங்கள்.

அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும், அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நமது உறுதியை செய்தியைச் சொல்லுங்கள். அவர்களோடும் நட்பு பாராட்டுங்கள் என்று கூறி, நாடு விட்டு நாடு வாழும் நமக்கிடையே இந்த உரையாற்றும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன். நன்றி

நன்றி : நீதியின் குரல்

Wednesday, March 25, 2009

அரசியலில் இலக்கியவாதிகள் - அருளடியான்


சிற்றிதழ்களுக்குள் நடக்கும் சண்டையையும், எழுத்தாளர்களுக்குள் நடக்கும் அக்கப்போரையும் நாம் அறிவோம். இவையெல்லாம் இலக்கியத்தில் நடக்கும் அரசியல். இவற்றைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. அரசியலில் ஈடுபட்டுள்ள இலக்கியவாதிகளைப் பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரையை எழுதியுள்ளேன். "எழுத்தாளர்களை அறிவாளிகளாகப் பார்க்கும் ஒரு சாராரையும், அவர்களை கோமாளிகளாகப் பார்க்கும் இன்னொரு சாராரையும் நம் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது." என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஓரளவு உண்மைதான். இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றிய அறிமுகமோ, அடிப்படை குடியுரிமைகள் பற்றிய புரிதலோ, இந்த நாட்டின் வரலாறோ, அதன் பன்மைத்துவமோ தெரியாத ஒருவர் இங்கு மிகப் பெரிய எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். மதச் சிறுபாண்மையினர் மீதான காழ்ப்புணர்ச்சி கூட அவரது தனித் திறமையாக மதிக்கப் படுகிறது. இது ஃபாசிசம் அல்லாமல் வேறு என்ன?

தி.மு.கவில் கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன் என பெண் கவிஞர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.கவில் நடிகர்கள் இருக்கும் அளவுக்கு இலக்கியவாதிகள் இல்லை. அங்கிருந்த கவிஞர் சினேகனும் நீக்கப்பட்டு விட்டார். காங்கிரஸில் கவிஞர் இந்திரா இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் எழுத்தாளர் சிவகாமி, கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்தராணி ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் கூட்டங்களில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் பங்கேற்கிறார். மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சில திங்களுக்கு முன் சென்னையில் மாநில மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இவ்வாண்டின் சாகித்ய அகதமி விருதைப் பெற்றுள்ளார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தி.மு.கவைச் சார்ந்தே தன் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கிறார். தி.மு.க நடத்தும் கவியரங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெறுபவர்.

பாட்டாளி மக்கள் கட்சி ‘தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளது. இந்த அமைப்பின் பொறுப்பாளர்களான எழுத்தாளர்கள் இராசேந்திரசோழன், பா. செயப்பிரகாசம் ஆகியோர் தேர்தல் புறக்கணிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்டவர்கள்.

கவிஞர் லீனா மணிமேகலை படைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, டில்லியை உலுக்கும் போராட்டங்களை நடத்தினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற இடதுசாரி அமைப்பின் ஆதரவாளர்கள் ‘வினவு’ என்ற கூட்டு வலைப்பதிவை நடத்தி வருகின்றனர். இவர்களும் தேர்தலை புறக்கணிப்பவர்கள்தான். இந்துத்துவ சார்பாக சில எழுத்தாளர்கள் எழுதினாலும் அவர்களில் பா.ஜ.க உறுப்பினராகத் தங்களை காட்டிக் கொள்பவர்கள் யாரும் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

புதிய முஸ்லிம் அரசியல் கட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகியவை தங்கள் இலக்கியப் பிரிவை இன்னும் தொடங்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சியின் ஹாஜா கனி கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத் தமிழன் வலைப்பதிவர்களிடையே பரவலாக அறியப் படுபவர்.

இலக்கியவாதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தி.மு.கவில் கவிஞர் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். நம் முதலமைச்சர் கலைஞரும் ஓர் இலக்கியவாதிதான். தமிழ் நாட்டில், வரும் மக்களவைத் தேர்தலில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் எத்தனை பேர் இலக்கியவாதிகளாக இருப்பர்?

- அருளடியான்

நன்றி : அதிகாலை இணைய நாளிதழ்

பீ.ஜைனுல் ஆபிதீன் தர்ஜமாவில் தவறுகள்! - தொண்டியில் விவாதம்

பீ.ஜைனுல் ஆபிதீன் தர்ஜமாவில் தவறுகள்! - தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்!
by ஹாபிழ். எம்.ஏ. அஹமது ஹசன்
(முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயீ)


அல்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விரிவுரை என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் விஷக்கருத்துக்களை பீ.ஜை திணித்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவருடைய தர்ஜமாவில் ஊடுறுவிக் கிடக்கும் ஏராளமான கொடிய தவறுகளை மார்க்க அறிஞர்கள் அடையாளம் காண்பித்து ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர்.

இந்த எச்சரிக்கை பொதுமக்களை சென்றடையும் சூழல் உருவாகும் போதெல்லாம் தன் அந்தஸ்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது? என்பதற்காக ‘என் தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார்’ என்று சவ(ட)ால் விடுவதை தன் வழமையாக்கிக் கொண்டுள்ளார்.

தொண்டியில் நடந்ததென்ன?

தொண்டியில் நிகழ்ந்ததும் இதுபோன்றதே! 11-12-2008 அன்று தொண்டியைச் சார்ந்த முஜீபுர்ரஹ்மான் உமரீ (கேம்ப் விருதுநகர்) பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி தொண்டியில் உரையாற்றினார்.

அடுத்த இரு நாட்களில் ‘தர்ஜமா பற்றி விவாதிக்க பீ.ஜை தயார்’ என்று தொண்டி முழுக்க வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜை, அதனைத் தொடர்ந்து வினியோகித்த நோட்டீஸில் முறையே 1) சஹாபாக்களை பின்பற்றுதல் 2) பீ.ஜை தர்ஜமாவில் தவறுகள் 3) ஹிஜ்ரா காலண்டர் 4) முஜீப் ஏன் தடம் புரண்டார் ஆகிய நான்கு தலைப்புகளை விவாதப் பொருளாக்கினார்.

விவாத ஒப்பந்தத்திற்கு ததஜ பிரமுகர்களைத்தான் அனுப்புவேன்! நான் நேரடியாக வரவே முடியாது! என்று தொண்டியைச் சார்ந்த திரிஸ்டார் அப்துல் அஜீஸ் மற்றும் நைனார் காஜா ஆகிய இரு தூதுவர்களின் மூலம் இறுதி அறிவிப்பு செய்து விட்டார்.

ஆனால் 18-12-2008 அன்று பீ. ஜைனுல் ஆபிதீனின் வண்டவாளங்களை தோலுரித்துக் காட்டும் ‘அன்பான வேண்டுகோள்’ என்ற தலைப்பில் முஜீபுர்ரஹ்மான் வெளியிட்ட நோட்டீஸ் பொதுமக்களை சென்றடைந்தது. இதை அறிந்தவுடன் விவாதத்திலிருந்து பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக் கொண்டிருந்த பீ. ஜை தன் சொந்த ஊரில் தன் இமேஜ்(?) மேலும் பாழாகி விடக்கூடாது என்ற நிர்பந்தத்தால் இவ்வொப்பந்தத்திற்கு தானே வருவதாக சம்மதித்து(?) நோட்டீஸ் வெளியிட்டார்.

அதில் தான் தர்ஜமாவில் செய்துள்ள தவறுகளை இருட்டடிப்பு செய்வதற்காக முந்தைய நோட்டீஸில் கூறப்பட்ட தலைப்புகளில் சிலதை நீக்கியும் சிலதைப் புதிதாதச் சேர்த்தும் குழப்பியிருந்தார்.

பின்வாங்கும் தந்திரங்கள்!

மேலும் விவாத ஒப்பந்தத்திற்காக இருதரப்பும் இணைந்து முடிவெடுக்க வேண்டிய இடம், காலம் ஆகியவற்றை நியாயமின்றி தானே முடிவு செய்தார். 20-01-2009 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தனது தொண்டி கட்சி அலுவலகத்தில் (சுலைா மகாலில்) காத்துக் கொண்டிருப்பதாகவும் இதனைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் வீர(?) பிரகடனம் செய்திருந்தார். இதன் மூலமாவது இவ்விவாதம் நின்று விடாதா? என்று மனப்பால் குடித்தார்.

இவ்வாறு ஒரு தரப்பாக முடிவெடுப்பது அயோக்கியத்தனம்! என்றும் அதனை அறிவுள்ள எவனும் ஏற்றுக் கொள்ள முடியாது! என்றும் பிறர் விஷயத்தில் இவரே கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

பீ.ஜையின் ஈனச் செயல்!

இவ்விவாதத்திலிருந்து எப்படியேனும் தப்பிக்கத் திட்டமிட்ட இவர் சுய வாழ்வில் ஒழுக்கக்கேட்டின் உச்சக் கட்டத்தில் இருக்கும் சாதாரண முஸ்லிமுக்குக் கூட மனம் வராத ஈனச் செயலில் ஈடுபட்டார். 21-12-2008 அன்று தொண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ர்மானை தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக அவதூறு கூறி அவரை பிரச்சனையில் சிக்க வைக்க முயற்சித்தார்.

அந்த அவதூறை நீக்கி எடிட்டிங் செய்யப்பட்டு ‘ததஜ சந்தித்த விவாதங்கள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு, சீடியாகவும் வெளியிடப்பட்டது. முஜீபுர்ரஹ்மான் தொடர்பாக நீர் கூறியது உண்மையாக இருந்தால், உமக்கு திராணி இருந்தால் எடிட்டிங் செய்யாமல் அந்த சீடியை அப்படியே தாருங்கள்! என்று தொண்டியில் 07-03-2009 அன்று ஊரறிய அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதனைக் கொடுக்காமல் அவர் பொய்யன்! அவதூறு ஆசாமி! என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் அவதூறுக்கு அஞ்சாமல், ஒருதலைப்பட்சமான அவரின் காலம், இடம் பற்றிய முடிவை முஜீபுர்ரஹ்மான் துணிவுடன் ஏற்றுக் கொண்டார்.

ஒப்புதல் கடிதம் தராது ஓட்டம்!

விவாதத்திலிருந்து பின்வாங்கும் பீ.ஜையின் சூழ்ச்சியை முஜீபுர்ர்மான் நன்கறிந்திருந்ததால் அவருடன் நடைபெறும் விவாதம் அவரது தர்ஜமா மற்றும் விளக்கவுரை பற்றி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக பீ.ஜையின் ஒப்புதல் கடிதத்ததை 11-01-2009 மாலை 5 மணிக்குத் தரவேண்டும் என்று ஊரறிய தொண்டியில் நோட்டீஸ் வெளியிட்டிருந்தார்.

குறிப்பிட்ட தேதியில் பீ.ஜையின் தொண்டி கட்சி அலுவலகத்திற்கு முஜீபுர்ரஹ்மானே நேரடியாக சென்றபோது பீ.ஜை ஒப்புதல் கடிதத்தை தர மறுத்தது தெரிய வந்தது. வெற்றிடமாகக் கிடந்த அவரது தொண்டி கட்சி அலுவலகத்தின் முன் நின்று ‘பீ.ஜையின் விவாத பித்தலாட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தி வீடியோ பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட அவரது கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவனின் வேஷம் கலைந்து விட்டதே! என்ற பயத்தில் வீடியோ கேமராவை தூக்கிக் கொண்டு இரவு 7 மணிக்கு தொண்டி மேலப்பள்ளிவாசலுக்கு ஓடோடி வந்தனர்.

பீ.ஜை விவாதத்திலிருந்து பின்வாங்கியது முடிவானதற்கு பிறகும் கூட அல்குர்ஆனின் முக்கியத்துவம் கருதி பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி மட்டும் விவாதிக்க ஏற்பாடு செய்ய இரு தரப்பு ஆதரவாளர்களில் சிலர் தங்களிடையே ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

விவாத ஒப்பந்தம்?

அதன் அடிப்படையில் 20-01-2009 அன்று பீ.ஜைக்கும் முஜீபுர்ரஹ்மானுக்கும் இடையே விவாத ஒப்பந்தம் நடைபெற்றது. சில நிமிடங்களில் நடந்து முடிய வேண்டிய ஒப்பந்தம் பீ.ஜையின் பிடிவாதத்தால் காலை 10:15 மணி முதல் துவங்கி மாலை சுமார் 6 மணி வரை நீடித்தது.

இவ்விவாதத்தில் தர்ஜமா மற்றும் விரிவுரை பற்றி மட்டும் விவாதிக்க பீ.ஜை இறுதிவரை ஏற்க மறுத்துவிட்டார். ஒரே விவாதத்தில் பல தலைப்புகளுடன், பல நாட்கள்தான் விவாதம் நடைபெற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பல மணி நேரங்களைக் கடத்தினார்.

அல்குர்ஆனின் மகத்துவத்தையும் தனித்துவத்தையும் கருத்தில் கொண்டு தர்ஜமா தவறுகளைப் பற்றி தனித் தலைப்பாக முதலில் விவாதிப்போம். பிற தலைப்புகளை தர்ஜமா பற்றிய விவாதத்திற்குப் பிறகு தனியாக விவாதித்துக் கொள்வோம்! என்று முஜீபுர்ரஹ்மான் தரப்பு கூறியதை பீ.ஜை தொடர்ந்து மறுத்து வந்தார்.

ரோஷத்தை கிளப்பிய திராணி!

நீங்கள் எழுதிய தர்ஜமா பற்றி தனித் தலைப்பாக விவாதிக்க உங்களுக்கு திராணி இல்லையா? ஏன் பயப்படுகிறீர்? என்று முஜீபுர்ர்மான் கேட்டது வீடியோவில் பதிவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த பீ.ஜை தன் தர்ஜமா தொடர்பான தனி விவாதத்தை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

எனவே அவரது தர்ஜமா தொடர்பான தனி விவாதம் 29-03-2009 அன்றும் பிற தலைப்புகள் மற்றொரு நாளில் தனி விவாதமாக நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பீ. ஜை கேட்ட வினாத்தாள்!

தர்ஜமா விவாதம் தொடர்பான பீ.ஜையின் சம்மதத்தை பொதுவானவதாகக் கருதி விடாதீர்கள்! அவரது தர்ஜமாக பற்றி முஜீபுர்ர்மான் இதுவரை விமர்சித்தவைகளைப் பற்றி மட்டுமே விவாதப் பொருளாக பீ.ஜை ஏற்றுக் கொண்டார். விரல் விட்டு எண்ணும் சில தவறுகளைப் பற்றி விவாதம் செய்ய ஒப்புக் கொள்ளத்தானா இந்த இரண்டு(?) மாதப் போராட்டம்???!

தான் பல ஆண்டுகளாக எழுதி, 2002ம் வருடம் முதல் 2008 வரை ஏழு பதிப்புகளை பல முறை சரிபார்த்து வெளியிட்டதாகக் கூறும் இவர், இது போன்ற சிறு பிள்ளைத் தனமான நிபந்தனைகளை முன் வைக்க வெட்கப்பட வேண்டாமா?

பேசப்படாத இன்னும் ஏராளமான தவறுகள் உள்ளனவே என்று முஜீபுர்ரஹ்மான் கேட்டதற்கு இப்போதே அந்தப் பட்டியலைத் தந்து விடுங்கள்! அப்போதுதான் நான் பி(?)ரிப்பேர் செய்து கொண்டு வரமுடியும் என்று பீ.ஜை கூறினார்.

தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார் என்று ஊரறிய வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜையின் பரிதாப நிலை பாரீர்!

முஜீபுர்ர்மானை விவாத்திற்கு அழைத்;து வந்தால் ரூபாய் 5000 பரிசு என்று பொதுமக்களிடம் ஃபிலிம் காட்டிய பீ.ஜையின் இழிநிலை பாரீர்!

இது, மக்கு மாணவன் பரீட்சையில் பாஸாக ஆசிரியரிடம் பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் கேட்பது போன்றதல்லவா? என்று கூறி பொதுமக்கள் சிரிக்கின்றனர்.

இப்படி இவர் வினாத்தாள் கேட்பது நியாயம் என்றால் 21-12-2008 தொண்டி பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ரஹ்மானின் முகத்திரையை கிழிக்கப்போவதாக ஆணவத்தோடு எதற்காக கொக்கரித்தார்? தவறுகளின் பட்டியலைத் தாருங்கள்! பரிசீலிக்கிறேன் என்று பணிவுடன் கூறி தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பை(?) தக்க வைத்திருக்கலாமே! அந்தோ பரிதாபம்!

அந்த வினாத்தாள் பட்டியலை கொடுக்காவிட்டால் அதையே காரணம் காட்டி பீ.ஜை தப்பிவிடுவார் என்பதை உணர்ந்த முஜீபுர்ர்மான் பீ.ஜை கேட்ட பட்டியலை தரவும் சம்மதித்தார்.

பீ.ஜை தர்ஜமாவின் 399 விளக்கக் குறிப்புகளில் வெறும் 28 விளக்கக் குறிப்புகளையும் தர்ஜமாவில் காணப்படும் மொழியாக்கப் பிழைகள், தொகுக்கப்பட்ட வரலாறு, இம்மொழிபெயர்ப்பு பற்றி. . . ஆகிய தலைப்புகளைக் கொண்ட பட்டியலை 03-02-2009 அன்று ஒப்படைத்தார்.

இரு தரப்பினரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கிணங்க முஜீபுர்ர்மான் மேற்கண்ட பட்டியலை ஒப்படைத்த பிறகும் கூட, அதிலும் மேலதிக விபரங்கள் கேட்டு, பீ.ஜை அங்கலாய்ப்பது மீண்டும் விவாதத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

‘ஏகத்துவம்’ மாத இதழின் தில்லுமுல்லு!

இந்த விவாத ஒப்பந்தத்தின் நிகழ்வுகள் இவ்வாறு இருக்க மார்ச் 2009 ‘ஏகத்துவம்’ மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் வழமை போல பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளனர்.

பீஜைனுல் ஆபிதீனின் மூன் பப்ளிகேஷன் மூலமாக வெளியிட்டுள்ள, அவரது தர்ஜமா தொடர்பான விவாத ஒப்பந்தத்தை ததஜவுக்கும் முஜீபுர்ர்மானுக்கும் நடந்ததாக சித்தரித்து பீ ஜையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இதன் நன்றிக் கடனாக, தர்ஜமா வியாபாரத்தில் பீ.ஜைக்கு கிடைக்கும் இலாபத்தில் துன்பத்தில் கைகொடுக்கும் தன் தொண்டர்களை இணைத்துக் கொள்வாரா?!

இவர்களின் சல்லித்தனத்தை இவர்களின் உயிர் நண்பர்களே மேடை போட்டு உலகறிய முழங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்கள் பிறரைப் பார்த்து சல்லிக் காசுக்காக செயல் படுபவர்கள் என்று குற்றம் சாட்டுவது கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிவதற்குச் சமமல்லவா?

வேதம் ஓதும் சாத்தான்கள்!

இந்தப் புல்லுறுவிகள் தங்களின் அயோக்கியத் தனங்களை மறைப்பதற்காக கட்டுரையின் துவக்கத்திலும் இறுதியிலும் அல்குர்ஆனின் சில வசனங்களை எழுதி மார்க்கச் சாயம் பூசிக் கொள்கின்றனர். வேதம் ஓதும் சாத்தான்கள் இவர்கள் தானோ?!

விவாதத்திற்கு முன்னரே இவ்வாறு திசை திருப்புவோர் விவாதத்தின் போதும் அதற்குப் பிறகும் என்னென்ன நரித்தனங்களை அரங்கேற்றப்போகிறார்களோ?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கிணங்க, இவர்களின் போலித்தனங்களை அறிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அல்ம்துலில்லாஹ்!

பலரை சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரை பலகாலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை பீ.ஜையும் அவரது ஆதரவாளர்களும் உணர்வது எப்போது?

பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! பிறர் பற்றி இவர்கள் கூறும் எந்த தகவல்களையும் உரிய முறையில் தீர விசாரிக்கமால் தயவு செய்து நம்பி ஏமாறாதீர்கள்!

சத்தியம் நிலை நாட்டப்படவும் இந்தப் போலிகள் முழுமையாக அடையாளம் காட்டப்படவும் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள்!

- அல்லாஹ் போதுமானவன் -

(மார்ச் 2009 ஏகத்துவம் மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் தவறான பல தகவல்களை பதிய வைத்ததே இதனை நான் எழுதி வெளியிடுவதற்குக் காரணம்!)

நன்றி : இஸ்லாம் கல்வி

Tuesday, March 24, 2009

பா.ஜ.க உடன் கூட்டணி- தமிழக அரசியலில் சரத்குமார் காணாமல் போவார் -- பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில தலைவர் வெளியிட்டுள்ள செய்தி :


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பா.. வின் மதவெறி பாசிச கொள்கையால் பா.. வை கைவிட்ட நிலையில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பா.. உடன் கூட்டணி வைத்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது

.... நாடார் சமுதாய மக்களின் பிரதிநிதியாக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்கும், கண்ணியத்திற்கும் காரணமான கர்மவீரர் காமராஜர் அவர்கள் சங்பரிவாரங்களின் பாசிச கொள்கைகளை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்தினால் டெல்லியில் அவரை வீட்டோடு எரித்து கொள்ள முயற்சித்தவர்கள்தான் இந்த பா.. வினர்

காமராஜரை உயிரோடு எரித்து கொள்ள முயன்ற சங்பரிவாரத்தைச் சேர்ந்த பா.. வோடு கூட்டணி வைத்துள்ள சரத்குமாரை நாடார் சமுதாயம் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

பா.. வோடு கூட்டணி வைத்துள்ள சரத்குமார் தமிழக அரசியலில் காணாமல் போகும் அளவிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.




முஸ்லிம் கட்சிகள் தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுமா?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுமா? அல்லது தங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையே தங்கள் தேர்தல் அறிக்கை என அறிவிக்குமா?

நன்றி : மக்களவைத் தேர்தல் 2009

Monday, March 23, 2009

3 தொகுதிகளைத் தந்தால் கூட்டணி: மனித நேய கட்சி

3 தொகுதிகளைத் தந்தால் கூட்டணி: மனித நேய கட்சி

திருவாரூர்: லோக்சபா தேர்தலில் மனித நேயக் கட்சிக்கு 3 தொகுதிகளைத் தர வேண்டும். அப்படித் தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம் என மனித நேயக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூண் ரஷீத் கூறியுள்ளார்.

திருவாரூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மனித நேயக் கட்சி வேட்பாளர்கள் லஞ்சம், ஊழலுக்கு எதிரானவர்கள். அவற்றை ஒழிக்கப் பாடுபடுவார்கள்.

எங்களுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது. இந்தத் தொகுதிகளை முன்வைத்து எங்களுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் பேச்சு நடத்துவோம். குறைந்தது 3 தொகுதிகளையாவது எதிர்பார்க்கிறோம். அப்படித் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.

திமுகவுக்கே முன்னுரிமை தர விரும்புகிறோம். அதேசமயம், அதிமுக 3 தொகுதிகளைக் கொடுத்தால் அதனுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளோம். அதேசமயம், பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக உறுதியளிக்க வேண்டும் என்றார் ரஷீத்.

நன்றி : தட்ஸ்தமிழ்

எந்த அணிக்கு ஆதரவு ? ஏப்.,5ல் முடிவு : இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பேட்டி

எந்த அணிக்கு ஆதரவு ? ஏப்.,5ல் முடிவு : இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பேட்டி

மதுரை : முஸ்லிம்களுக்கு போதுமான தனி இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று இந்திய தவ்ஹீத்ஜமாத் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார்.


மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்த முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு இந்திய அளவில் இன்றுவரை செயல்படுத்தவில்லை. அவர்கள் அமைத்த ராஜேந்திர சச்சார் கமிஷன் முஸ்லிம்களின் நிலை குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்ததும் கிடப்பில் போடப்பட்டது. நாங்கள் அவர்களுக்கு அளித்த ஓட்டுகள் விரயமாகிவிட்டன. அதேசமயம் 3வது அணியையும் நம்பமுடியவில்லை. வருகிற லோக்சபா தேர்தலில் நாங்கள் எந்த அணியில் இருப்பது என்பதை ஏப்., 5ல் தஞ்சையில் நடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தெளிவாக அறிவிப்போம்.


எங்களுக்கு உறுதி தரும் கட்சிகள் அதை எழுத்துப் பூர்வமாக தரவேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதல்ல. தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வருண்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தற்போது பிராந்திய கட்சிகள் முக்கியத்துவம் பெறுவது நல்லதுதான். மத்திய அரசில் தமிழக கட்சிகள் இடம் பெற்றதால் தான் நல்ல திட்டங்கள் நமக்கு கிடைத்தன. இலங்கை பிரச்னையை ஜெயலலிதா கையில் எடுத்த பின் அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.செயலர் ஜாகீர், பொருளாளர் அபுபக்கர், மாவட்டத் தலைவர் அப்துல்காதர் உடனிருந்தனர்.

நன்றி : தினமலர்

Sunday, March 22, 2009

சட்டக் கல்லூரி -- நுழைவு தேர்வு

சட்டக் கல்லூரி பொது நுழைவி தேர்வு குறித்து USF வெளியிட்டுள்ள செய்தி

வருண் காந்தி தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும் -- பாப்புலர் ப்ரண்ட்

இது குறித்து பாப்புலர் ப்ரண்ட் வெளியிட்டுள்ள அறிக்கை

Saturday, March 21, 2009

தென்காசி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடு - பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா


தென்காசி டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாப்புலர் பிரன்ட் வலியுறுத்தல்



தென்காசியில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

நெல்லை, மார்ச் 21: நெல்லை மாவட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயலாளர் மஹ்பூப் அன்சாரி கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

மத துவேச செயல்களில் ஈடுபடும் தென்காசி டி.எஸ்.பி., மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகரையில் அப்பாவி முஸ்லிம்கள் 9 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக காவல்நிலையத்தில் வைத்து ஜமாத்தார்கள், பொதுமக்கள் மத்தியில் அப்பாவி முஸ்லிம்களை மததுவேசத்துடன் பேசி கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் இதில் தொடர்புடைய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி உட்கோட்டத்துக்குட்பட்ட முஸ்லிம்களை குறிவைத்து வீண்பழி சுமத்துவதையும், அவர்களுக்கு பாஸ்போர்ட் தரமாட்டோம் என காவல்துறையினர் மிரட்டுவதையும் கைவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தினகரன் (21.03.2009)

Wednesday, March 18, 2009

முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி பேச்சு-ஆணையம் நோட்டீஸ்

பிலிபித் (உ.பி.): மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.

மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில், இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான்.

வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரித்து விட்டனர்-வருண் காந்தி:

இதற்கிடையே தான் பேசியது வேறு, அதைத் திரித்து செய்திகள் வெளியாகி விட்டன என்று வருண் காந்தி கூறியுள்ளார். வருண் காந்தி விவகாரம் குறித்து பாஜக கருத்து ஏதும் கூறவில்லை.

காங்கிஸ் பாய்ச்சல்:

வருண் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மோசமான பேச்சு மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. ஆனால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வருண் காந்தி. அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்துக்குரியது இது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

Monday, March 16, 2009

பார்த்திபனூரில் IDMK விளக்க கூட்டம்

டாக்டர் பகுருதீன் விளக்க உரையாற்றுகின்றார், மேடையில் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A.B.L செயலாளர் திரு. ஜஹாங்கீர்


இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் நேற்று (15.03.2009) ஞாயிறு மாலை சுமார் 5.30ல் இருந்து இரவு 7.30 வரை இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

உள்ளரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் டாக்டர் பகுருதீன் (9344510369) மற்றும் திரு. முகவைத்தமிழன் (9047507665), இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A.B.L (9894262100), மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீர் (9443021050), மாவட்ட பொருளாலர் திரு. நஜ்முதீன்(9842388428), பிரபல வழக்கறிஞர் திரு. காந்தி M.A.B.L (9486651744) உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழச்சிக்கான ஏற்பாடுகளை பார்த்திபனூரை சோந்த திரு. அஷ்ரப் அவர்கள் ஏற்பாடு செய்திரந்தார்கள். நிகழச்சியில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், பார்த்திபனூர் நகர் பொறுப்பில் உள்ள பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Saturday, March 14, 2009

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து USF கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி மக்களை காக்க கோரி USF சார்பாக திருச்சியில் 06.03.09 அன்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. வெஸ்ட்ரி ஸ்கூல் அருகே தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.. ஏராளமான மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.. பேரணியை USF திருச்சி மாவட்ட தலைவர் திரு.ஆ.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. USF மாநில செயலாளர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்.. Z.முஹம்மது தம்பி நன்றியுரையாற்றினார்..



பேரணியின் முடிவில் USF மாநிலச் செயளாலர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் D.R.O திரு.தட்சினாமூர்த்தியிடம் மனு அளித்தார்...




செய்தி : USF தலைமையகம்