Tuesday, July 28, 2009

கோவை போலீஸ் அதிகாரி நடத்திய வெடிகுண்டு நாடகம் நூல் வெளீயீட்டு விழா நடந்தது.



கடந்த 2006 ஆண்டு ஜீலை 22 அன்று கோவையில் வெடிகுண்டு பீதியை கிளப்பிய ஹாருன்பாஷா உட்பட 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்கு புனைந்து. மனித நீதிப்பாசறையின் மீது வெடிகுண்டு பழிசுமத்தினார் உளவுத்துறை அதிகாரி ஏ.சி.ரத்தினசபாபதி.

இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி(சிறப்பு புலனாய்வுகுழு) இது பொய் வழக்கு என்று கோவை ஜே.எம்.-7 நீதிமன்றத்தில் ஈறுதி அறிக்கை சமர்ப்பித்தது.

அறிக்கை சமாப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகிறும் மேற்படி ஏ.சி.ரத்தினசபாபதி. மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் கோடிட்டு காட்டவும், இதனை மக்கள் போரட்டமாக உருவெடுக்கச் செய்யவும், மேற்படி ஆங்கில வடிவிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஈறுதி அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழில் மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்கள்.

போலிஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம் என்ற இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழா கோவையில் 26-07-09 அன்று மாலை 7-39 மணிக்கு நடைபெற்றது.இதனை தொடா்ந்து ஏ.சி.ரத்தினசபாபதி. மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்திமாபெரும் மனித உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துனைத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் நாசர் வரவே்ற்புரை நிகழ்த்தினர்.

புத்தகத்தின் ஆசிரியர் வழக்கறிஞர் முஹம்மது யுசுப் (பொதுச் செயலாளர் N.C.H.R.O தமிழ்நாடு) கருத்துரையாற்றினர்.இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட வழக்கறிஞர் பாவனி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு) பெற்றுக் கொண்டார்.
மேற்படி கோரிக்கையை வழியுறுத்தி கடந்த ஜீலை 11 முதல் 24 வரை கையெழுத்து இயக்கத்தின் மூல்ம் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்து பிரதிகளை மாவட்ட தலைவர் அப்துல் நாசர் அவாகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவாகளிடம் ஒப்படைத்தார்.இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா , வழக்கறிஞர் பாவனி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு), வழக்கறிஞர் மதுரை அழகு மணி, போரா.அ மார்கஸ், N.C.H.R.O வின் தேசிய பொது செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது செரீப், N.C.H.R.O வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மதுரை ஜின்னா, வழக்கறிஞர் மதுரை ஷாஜகான் (செயலாளர் National Lawyer Network ). ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.இக்கரத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1- ஏ.சி.ரத்தினசபாதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாமதமின்றி உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

2- மேலும் இந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

3- மேலும் இந்த பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.










செய்தி : கோவை தங்கப்பா

Saturday, July 25, 2009

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கையில் வன்முறை தவ்ஹீத் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது

இலங்கை, 25.07.2009 சனிக்கிழமை இலங்கையின் கல் (Diamond) வர்த்தகத்தில் சிறந்து விளங்குவது பேருவலை நகரம்.

இங்குள்ள மஹகோட பகுதியில் உள்ள மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி பிரசித்தி பெற்றதாகும். நேற்று 24.07.2009 இரவு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் திரண்டு வந்து மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியை தாக்கி சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களை ஓடஓட விரட்டியடித்து ஆயதங்களால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் சகோ.மாஹின் உள்ளிட்ட இருவர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். மேலுர் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும் காடையர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை தீ வைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் இவர்கள் தீவைத்த காரணத்தினால் அங்கிருந்த புனித திருமறைகளும் (குர்ஆன்) மார்க்க விளக்க புத்தகங்களும் பெரும் எண்ணிக்கையில் எரிந்து சாம்பலாகி உள்ளன.

பள்ளிக்கு எதிரில் இருந்த மருந்தகம் (Pharmacy) ஒன்றும் கூட இவ்வன்முறையாளர்களால் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தர்ஹா டவுன் என்று அழைக்கப்படும் இங்கு, நேற்று புஹாரி கந்தூரி வைபவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வன்முறையைத் தொடர்ந்து நாளை 26.07.2009 இப்பள்ளியில் நடைபெற இருந்த மார்க்க நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் மௌலவி முபாரக் மதனி, மௌலவி இஸ்மாயில் ஸலபி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் கோவை ஐயூப் ஆகியோர் உரையாற்ற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது செய்தியாளர்
பேருவலையிலிருந்து இம்தியாஸ்
நன்றி : இஸ்லாமிய தஃவா டாட் காம்

Friday, July 24, 2009

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி நடைபெற்றது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15 ம் தேதி அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட தலைவர் நாசர் மாவட்ட செயலாளாளர் அப்பாஸ். அவாகள் மிடியா வாய்ஸ் இனைதளத்திற்கு அளித்த பேட்டி
.தமிழ்நாட்டியில் 2 வருடமாக நடத்துகிறோம். சென்ற வருடம் மதுரையிலும்.இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் கும்பகோணத்திலும் நடக்கயிருக்கிறது.இந்த அணிவகுப்புயில்.தமிழ்நாட்டியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்றோர்கள்.அணிவகுப்பில் கலந்துகொள்கிறார்கள்.இதற்காக 4 மாதகாலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம்.காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடக்கிறது. இந்த அணிவகுப்பில் 1 குருப்புக்கு 33 பேர். இதுபோல் கோவை மண்டலத்தில்(கோவை,மேட்டுபாளைம்,திருப்புர்,ஈரோடு) இருந்து 7 குருப்பாக அணிவகுப்பில் இந்த வருடம் கலந்து கொள்கிறோம்.இதுபோல் தமிழகத்தில் இருந்து மதுரை,திருச்சி, நெல்லை,சென்னை,போன்ற இன்னும் சில மாவட்டகளில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட குருப்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு மிக கடினமான முறையில் பயிற்சி கொடுத்து வருகிறோம்.இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டகளில் நடத்த திட்டம்மிட்டு உள்ளோம்.என்று பேட்டி அளித்தார்கள்.





செய்தி: புகைபடம்: கோவை தங்கப்பா

Saturday, July 18, 2009

இஸ்ராவும் மிஃராஜும்

இஸ்ராவும் மிஃராஜும்


நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையானது ஓர் அதிசய நிகழ்வாகும். ஓர் அற்புதமாகவும் மாத்திரமின்றி பல தத்துவங்களையும்- தாத்பரியங்களையும் தன்னகத்தே பொதிந்ததாகவும்- அடிப்படையான பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. நபியவர்களின் இவ்விண்ணுலக யாத்திரை இரு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணம் அதன் முதற் கட்டமாகும். அதனை அல் இஸ்ரா என வழங்குகிறோம். இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நபியவர்கள் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அமைந்தது. இதுவே மிஃராஜ் எனப்படுகிறது. இந்த யாத்திரையின் முதற் கட்டத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

நபியவர்களின் இப்புனித யாத்திரை முஸ்லிம்களின் இரு முக்கிய தலங்களுடன் தொடர்புற்று இருப்பதைக் காண முடிகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமும்- அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமே இவ்விரு புனித ஸ்தலங்களாகும்.

Sunday, July 12, 2009

நீதிமன்ற காவலில் இருந்த முஸ்லிம் மீது 6 பொய் வழக்கு

திரு. அப்துல் ரசாக் அவர்கள்

மதுரை: வேறு ஒரு வழக்கில் கோர்ட் காவலில் இருந்த போது போலீசார் பொய்யாக பதிவு செய்த 6 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோரிய மனு குறித்து டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தைசேர்ந்த மக்கள் விக்டரி இயக்க தலைவர் அப்துல் ரசாக் ( 9443465765) தாக்கல் செய்த ரிட் மனு: நான், ஊனமுற்றவர்கள், விபத்தில் பாதிக்கப்படுவோர், முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். ராமநாதபுரத்தில் கடந்தாண்டு நவம்பரில் மழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்ட போது பாரதிநகர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நான் அவர்களை சமாதானப்படுத்தினேன். இதை மனதில் வைத்து என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். இவ்வழக்கில் நான் முன்ஜாமீன் பெற்றேன். பிறகு 2008 டிச., 5ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னை போலீசார் கைது செய்தனர். மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் என்னை விடுவிக்கும்படி அன்று மாலை 4 மணிக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில் " அன்று காலையில் நடந்த மறியல் போராட்டத்தில் கைதாகி ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் போலீஸ் வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்தியதாக,' என் மீது 6 வழக்குகளை போலீசார் பொய்யாக பதிவு செய்தனர். போலீசாருக்கு எதிராக போராடுவதால் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா ஆஜரானார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ""மனு குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், டி.ஜி.பி., எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப,'' உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர்

Monday, July 6, 2009

பாப்புலர் ஃப்ரண்ட் பரேட் -- சென்னையில் பயிற்சிக்கு தடை??


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை, மங்களூர், கொச்சி, வயநாடு ஆகிய நான்கு இடங்களில் பல்வேறு தடைகளை தாண்டி சுதந்திர தின அணிவகுப்பு நடத்தியது.. இதைப்போல் இந்த ஆண்டும் நான்கு இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கான பயிற்சிகளை அதன் செயல் வீரர்கள் செய்து வருகிறார்கள்..

இதற்காக ஓட்டேரி இல் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று பயிற்சி மேற்கொள்ள வந்திருந்தவர்களை போலீசார் தடுத்தனர்..

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சென்னை மாவட்ட செயலாளர் முகமது ஹுசேன் கூறுகையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது எங்கள் உரிமை என்று கூறினார். கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மதுரையில் ஒரு மிகப்பெரிய விழாவாக நடத்தி முடித்தோம், அதைப்போல் இந்த ஆண்டு கும்பகோணத்தில் நடத்த இருக்கிறோம் என்றார். இரண்டு வாரங்களுக்கு முன்பே நாங்கள் செய்யவிருந்த பயிற்சியை போலீசார் தடுத்தனர், எனவே முறையான அனுமதி கேட்டு காவல்துறையை நாடினோம் ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் அனுமதி குறித்து காவல்துறை எந்த பதிலும் தராததால் இன்று நாங்கள் பயிற்சி மேற்கொள்கிறோம் என்றார்..

சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் பயிற்சி நடத்த அனுமதி அளித்தனர்...

Sunday, July 5, 2009

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

ராமநாதபுரம் : கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மொபைல் போனில் வரும் மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருந் தால் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பது அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி மிரட்ட துவங்குவது தெரியவந்தது.

மாவட்டம் முழுவதும் பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.

பெண்கள் தங்களை எப்படி காத்து கொள்வது என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள் ,இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்புமுதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.

பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ ,மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்'என்றார்

நன்றி : தினமலர் (இராமநாதபுரம் மாவட்ட செய்திகள) 05.07.2009

Friday, July 3, 2009

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்த ஆர்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் திரு.முகமது நாஜிம் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் திரு. ப. முகமது ஹுசேன் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்..

லிபரான் மற்றும் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் -- பாப்புலர் ஃப்ரண்ட்

லிபரான் கமிஷன் மற்றும் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்க தவறினால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை..