Saturday, May 30, 2009

சென்னை தாதாஷாமக்கானில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் -- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தியது



நாடு முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களை போல் இந்த வருடமும் கல்வி வழிகாட்டி முகாம்களும், விழிப்புணர்வு பிரச்சரங்களும் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி முகாம்கள் நடத்தப்படுகின்றன.




இதன் ஒரு பகுதியாக சென்னை தாதாஷாமக்கான் பகுதியில் பள்ளி செல்வோம் என்ற முழக்கத்துடன் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் 30.05.09 அன்று காளை10.30 மணிக்கு நடைபெற்றது.





இந்த நிகழ்ச்சிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. முகம்மது ஹுசைன் தலைமை தாங்கினார். திரு ஹிணாயத் அவர்கள் வரவேற்புரையாற்றினர். சனா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திரு. முகம்மது ஆசம் மற்றும் மனித உரிமை ஆர்வலர் திரு. ஹபிஸ் அஹமது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.




இதை தொடர்ந்து நடைபெற்ற குழந்தைகள் கலந்துகொண்ட பிரசார ஊர்வலத்தை திரு. முகம்மது ஆசம் அவர்கள் கோடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது .


Sunday, May 17, 2009

திரு. ரித்தீஷ் அவர்கள் வெற்றி !! - முகவை தேர்தல் முடிவுகள்

திரு. ரித்தீஷ் (எ) சிவக்குமார் M.P அவர்கள்

ராமநாதபுரம் தொகுதியில்
தி.மு.க.வேட்பாளர் ரித்திஷ் வெற்றி

ராமநாதபுரம்,மே.17-
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை

பாராளுமன்ற தேர்தல் அறி விப்பு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 68.7 ச தவீத வாக்குகள் பதிவாகியது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று ராமநாதபுரம் செய்யதம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வாசுகி முன்னிலையில் தொகுதிவாரியாக தனி அறையில் சீல் வைக்கப்பட்டு இருந்த வாக்குபதிவு எந்திரங்கள் அந்ததந்த தொகுதி வாக்குகள் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ராமநாதபுரம்,திருவாடானைசட்டசபை தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தரைத் தளத்திலும்,திருச்சுழி,அறந் தாங்கிதொகுதி வாக்குஎண் ணிக்கை மேற்குபகுதியில்உள்ள தரைத்தளத்திலும், பரமக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் மாடியில்கிழக்குபகுயிலும், முதுகுளத் தூர் தொகுதி வாக்குஎண் ணிக்கை முதல் மாடியில் மேற்கு பகுதியிலும் நடந்தது.வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொருசட்ட மன்றதொகுதிக்கும் 12 மேஜைகள் வீதம் 72 மேஜைகள்அமைக்கப்பட்டு ள்ளன. ஒவ்வொரு மேஜைக் கும் ஒரு மேற்பார் வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார் வையாளர் வீதம் மொத்தம் 216 அரசுஅலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட்டனர்.

வாக்குஎண்ணிகை மையத்துக்குள்வேட்பா ளர்கள், அனுமதி பெற்ற அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தைசுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்ஏராள மான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
தி.மு.க.வெற்றி

வாக்கு எண்ணிக்கை மொத்தம் 27 சுற்றுகள் நடந்தது. இதன் முடிவில் தி.மு.க.வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு திரு. ரித்தீஸ் அவர்கள் பொன்னாடை அனிவிக்கிறார். அருகில் தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி, அமைச்சர் சு.ப. தங்கவேலன், திருமதி. பவானி எம்.பி , திரு. ரகுமான்கான் ஆகியோர்

மொத்தவாக்குகள் -11,30,489

பதிவானவை - 7,75,461

தபால்ஓட்டு - 2,378

செல்லாதவை - 499

ஜே.கே.ரித்திஷ்(தி.மு.க.வெற்றி)- 2,94,945

வ.சத்திய மூர்த்தி(அ.தி.மு.க.) - 2,25,030

சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க.) - 1,28,322

சிங்கைஜின்னா (தே.மு.தி.க.) - 49,571

பிரிசில்லாபாண்டியன்(ப.சமாஜ்)- 39,086

சலிமுல்லாகான்(ம.ம.க.) - 21,439

முகமதுஅபிதலி(ஜா.மு.மோ) - 1,496

ஜகாங்கீர்(சுயேட்சை) - 5,872

முருகேந்திரன்(சுயே) - 3470

பாஸ்கரன் (சுயே) -2329

காளிமுத்து(சுயே) -1769

பாலமுருகன்(சுயே) -1244

செல்லதுரை(சுயே) - 1186

சண்முகையாபாண்டியன்(சுயே) -1119

சுவார்ட்ஸ்துரை (சுயே) - 961


பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ரித்திசுக்கு தேர்தல் அதிகாரி வாசுகி சான்றிதழை வழங்கினார். அப்போது வேட்பாளர் ரித்திசை அமைச்சர் சுப.தங்கவேலன்,எம்.எல்.ஏ.க்கள்அசன்அலி, முருகவேல்,ராம்பிரபு,உதயம்சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நகர்தி.மு.க.செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், ïனியன் தலைவர்கள் திவாகரன், நல்லசேதுபதி, எம்எ.சேக், பெருநாழிபோஸ்,மாவட்டதுணை செயலாளர் அகமதுதம்பி, ராமர்,திசை வீரன், சேது கருணாநிதி, துரைச்சாமி, நாகநாதசேதுபதி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் வாழ்த்தினர்.
செய்தி நன்றி : தினத்தந்தி

"மதவாதத்தின் முன் நாங்கள் தோற்றுவிட்டோம்'

நாகர்கோவில், மே 16: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மதவாதத்தின்முன் நாங்கள் தோற்றுவிட்டோம் என, பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை காலையிலிருந்து மாலை வரையில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவரங்களை பொன். ராதாகிருஷ்ணன் அவ்வப்போது தெரிந்து கொண்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  இத் தொகுதியில் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் அத்தனைபேரும், கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக உழைத்தனர். இருந்தாலும்கூட மதவாதத்தின்முன் நாங்கள் தோற்றுப்போனதை ஒப்புக் கொள்கிறோம். யார் மதவெறியுடன் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு இப்போது புரியும்.  ஆனால், மத்திய, மாநில அரசுகளின் மதவிரோதப் போக்குக்கு எதிராக இம் மாவட்டத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உணர்வை அரசியல் கட்சிகளும், அரசுகளும் புறக்கணித்தால், ஜனநாயகத்தில் தோற்றுப்போன மக்கள் வேறுவிதமான நடவடிக்கைகளுக்கு தூண்டப்பட்டதாக ஆகிவிடும். எனவே, மதத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

மிஸ்ரா கமிசன் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் -- பாப்புலர் பிரண்ட்

தேர்தல் நிலவரம் குறித்து பாப்புலர் பிரண்ட் வெளியிட்டுள்ள அறிக்கை

Friday, May 8, 2009

மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) நிகழ்ச்சியில்

டாக்டர். சுரேஸ் கண்ணன் , திரு. முகவைத்தமிழன், Eng. கிருஸ்னன், திரு. பாஸ்கரன் ஆகியோர்

பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) தமிழ்நாடு தலைவர் டாக்டர். சுரேஸ் கண்ணன் M.A., B.L., M.Ed., HDCM., Phd.மாநில பொருளாலர் திருமதி. ஆனந்தி M.L., M.L.S., D.L.A.L., Phd., பொதுச்செயலாளர் திரு.ஜெயபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர். சுரேஸ் கண்ணன் அவர்கள் திரு. அக்பர் ராஜர் B.A.B.L அவர்களுக்கு பொண்ணாடை போர்த்தி கவுரவிக்கிறார்

பிரபல பத்திரிகையாளர் திரு. திலிப்குமார் அவர்கள்

மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வளுதூர். திரு. பாஸ்க்கரன், மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. அக்பர் ராஜா B.A.B.L பிரபல பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் இதழ் நிருபர் பரமக்குடி திரு. திலிப் குமார் , வளுதூர் திரு. மூர்த்தி, திரு. கோபால், திரு. சவுக்கத், முதுவை டிம்பர் உரிமையாளர் மற்றும் முன்னால் தே.மு.தி.க பிரமுகர் திரு. ராஜா முகம்மது, இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதுவை டிம்பர் திரு. ராஜா முகம்மது மற்றும் திரு. பாஸ்கரன்

திரு. அக்பர் ராஜா, திரு. ராஜா முகம்மது, திரு. முகவைத்தமிழன், திரு. கிருஸ்னன், திரு.வீரக்குமார்

Thursday, May 7, 2009

சிந்திப்பீர், வாக்களிப்பீர்!




அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே,

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களுக்குப் பிறகு நம் சமுதாயம் இந்நிலைக்கு சென்றுள்ளதைக் கண்கூடாகக் கண்டபின்பும் திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து நாம் வாக்களித்து வீணடைய வேண்டும்?.

மாற்றார்கள் அறிந்த அளவுக்குக்கூட சுயபலத்தை அறியாமலேயே இருக்கும் சகோதர சகோதரிகளே,

முஸ்லிம் அல்லாதவர் நம்முடைய வோட்டைப் பெற்று நம்மை ஓட்டாண்டி ஆக்கி, ஒரு சீட்டுச் சமுதாயமாக இன்னும் வைத்திருக்கும் அவலம் தீர்வது எப்போது?

நாம் பலம் பெற்று விளங்கும் தொகுதிகளில் திராவிடக் கட்சிகள் ஜெயிக்கும்போது (மத்திய சென்னை, துறைமுகம், ஆயிரம் விளக்கு இன்னும் நிறைய), நாம் ஏன் முஸ்லிம்களைத் தேர்வு செய்து நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒலித்திட ஒன்றுபட்டு வாக்களிக்க முன்வரக்கூடாது? நம் பலத்தின் மீது நமக்கே ஏன் நம்பிக்கை வரவில்லை?

பணபலம், அதிகார பலத்துக்கு முன்னால் அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்து ஒன்றுபட்டு வாக்களியுங்கள்.

திராவிடக் கட்சிகளில் உள்ள சிறுபான்மை (முஸ்லிம்) பிரிவுத் தலைவர்களால் சமுதாய வோட்டுகளில் பிரிந்து போவதைத் தவிர சமுதாயத்துக்கு என்ன பயன்?

சிந்திப்பீர்! இன்னும் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்! திராவிடக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர்கள் வெற்றியே பெற்றாலும் நம்முடைய குரல்களை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அவர்களால் ஒலிக்கச் செய்ய இயலுமா? அவர்களது கைகள் (வாயும் சேர்த்து தான்) கட்டபட்டுள்ளனவே! கட்சிக் கொறடவின் கட்டுபாட்டை மீறி, ஒரு MP/MLA சுயமாக எதுவும் சொல்லமுடியுமா? (மேலும் விபரம் வேண்டுவோர் ஜனாப் காதர் மொய்தீன் அவர்கள் திருவாய் மலர்ந்ததை நினைவு படுத்தி கொள்ளவும்). மொத்தத்தில் அவர்கள் தாம் முற்றிலுமாகச் சார்ந்து விட்ட கட்சியின் MP/MLA ஆகச் செயல்படுவதைத் தவிர்த்து, வேறென்ன முஸ்லிம்களுக்குச் செய்துவிட முடியும்?

இவர்களுக்கா உங்கள் வாக்கு?

கூட்டணியில் இருந்தாலும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தித்து, வேட்பாளரையே மாற்றும் மமதை பிடித்த 'சூத்திரதாரிக்கு' முகத்தினில் கரிபூசிடும் மகத்தான ஆயுதம் உங்கள் வோட்டென்பதை மறந்து விடவேண்டாம்.

அருமை முஸ்லிம் சமுதாய மக்களே! இவர்கள் நம் முதுகின் மீது மாறி மாறி சவாரி செய்து நம் சமதாயத்தைப் பிரித்து, புரட்டி, இந்நிலைக்குத் தள்ளி இருக்கிறார்கள் என்பதை என்றும் மறந்திட வேண்டாம். நாம் ஒவ்வொரு முறையும் நம் உரிமைக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலையில்தான் இக்கட்சிகள் நம்மை இன்றுவரை வைத்திருக்கின்றன. நம் வோட்டு மட்டும் அவர்களுக்கு வேண்டும்; ஆனால், நமக்கான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்கூட நமக்குத் தர மறுப்பார்கள். நாம் ஏன் இவர்கள் பின்னால் அலையை வேண்டும்? நம்முடைய ஒற்றுமையை ஓங்கி ஒலித்தால் நமக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வந்து சேராதா? நாம் ஏன் பலவீனப்பட்டுப் போனோம்? ஒற்றுமை இல்லாததால் தானே? ஏன் இந்த இழி நிலை தொடர வேண்டும்?

நமக்குள் எத்தனை பேதங்கள் இருந்தாலும் தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியைத் தேர்வு செய்யும் விஷயத்தில் ஒன்றுபடுங்கள். நம் சமுதாய வாக்கு நம் சமுதாயத்துக்குப் பயன்பட வில்லையென்றால் நம் குரல்கள் எப்படித்தான் ஆட்சியாளர்களை சென்றடைவது?

எனவே, முஸ்லிம் சமுதாயத்தவரையே உங்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்யுங்கள்.

முஸ்லிம் லீக்ஐத் திட்டமிட்டு ஓரங்கட்டி, நிரந்தரமான 'ஒரு சீட்டுக் கட்சி'யாக்கி, ஓட்டாண்டிகளாக்கி ஒதுக்கி ஓரத்தில் வைத்து, "உங்களுக்கு இதயத்தில் இடம் அளித்து விட்டேன்" என்று மாய்மாலம் காட்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய தக்க தருணம் இது.

மனிதநேய மக்கள் கட்சி உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் வோட்டுக்களை அவர்களுக்கு இட்டு வெற்றிபெறச் செய்யுங்கள். புத்தெழுச்சி பெறுவோம். நமக்கான பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுப்போம்.

சமுதாய மக்களே ஒன்றுபட்டு வோட்டளிப்பதன் மூலம், நாம் நம் பலத்தை உணர்த்திட அருமையான சந்தர்ப்பம் இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறந்திட வேண்டாம். ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த முஸ்லிம் வாக்காளர்களினால் இன்ஷா அல்லாஹ், ஒரு பெரும் மற்றத்தைக் கொண்டுவர முடியும். இன்று நாம் அளிக்கும் ஒன்றுபட்ட குரல், இன்ஷா அல்லாஹ் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எள் முனை அளவும் ஐயமில்லை. பெரும்பான்மை இன்றி அடுத்த கட்சியின் ஆதரவில் ஆட்சியைத் தள்ளும் ஆட்சியாளர்களுக்கு நம் சக்தியைப் புரிய வைப்போம்.

எனதருமைச் சமுதாய மக்களே!

நீங்கள் உங்கள் வாக்குகளை 100% செலுத்துங்கள். பிற இடங்களில் 50-60% பதிவாகும் வாக்குகள், நம் சமுதாய மக்கள் வாழும் இடங்களில் 80%க்கு மேல் உயர வேண்டும். இது ஒன்றே நம் பலத்தை அவர்களுக்கு உணர்த்தும்.

சிந்திப்பீர்! குடும்பத்துடன் உங்கள் வாக்குகளைத் திராவிடக் கட்சிகள் சவாரி செய்வதற்காகத் தம் முதுகைக் கொடுக்காத, நம் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும் தாருங்கள்.

இன்ஷா அல்லாஹ், திமுக அதிமுக இன்னும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற முனையும் 'அரசியல் பூனைகளுக்கு' துணிந்து மணி கட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
அபூ நஸீஹா

சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்

மனித உடலின் மின்காந்தத் திறனை
சீர்ப்படுத்தும் சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்


அஸ்ஸலாமு அலைக்கும்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே கணினியில் பணி செய்யும் இளைஞர் களுக்கு உடலில் உள்ள மூட்டுகளில் வரும் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். இந்த வலியை போக்குவதற்கு சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவப்படி உடலில் மின் காந்த திறனை சீர்ப்படுத்துவது குறித்து சைனீஸ் அக்கு பஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் மு.சாதிக் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகத் தில் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியால், தொடர்பு கொண்டு கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பப் பரிமாற்றங் கள் உடனுக்குடன் பெற்று பல்வேறு துறைகளில் அதிகளவில் வளர்ச்சி பெற்று வருகிறோம்.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. படித்த இளைஞர்கள் உட னுக்குடன் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது கணினி, இணைய தளத்தின்மூலம் தகவல் பரி மாற்றங்கள் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு பெறுவதுதான். இப்பணியில் இரவு - பகலாக பல மணி நேரங்கள் ஆண் - பெண் இருபாலரும் அமர்ந்த இடத்திலே பணி செய்யும் நிலையில் உள்ளனர்.

இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதால் இளம் வயதிலேயே உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளதோ அங்கெல்லாம் வலி ஏற்பட்டு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இம்மூட்டு வலி நோய்க்கு ஆங்கிலம் மருத்துவம் இருந்தாலும், எளிமையான இயற்கை மருத்துவமான சைனீஸ் அக்குபஞ்சர் சிகிற்சை முறையில் விரைவில் மூட்டு வலியைப் போக்குவதுடன், மேற்கொண்டு வராமல் தடுப்பதற்கான உடலில் மெலிந்த ஊசிகளை செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் மின்காந்த சக்தியினை சீர்படுத்தி நோய் அகற்றப் படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுகிறது.

இம்மருத்துவத்தில் முழு மையான நாடி பரிசோதனை, சைனீஸ் மருந்துகள், ஆஸ் டியோ அக்குபஞ்சர், எளிய முறையில் உடற்பயிற்சி போன்றவைகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் கணினித் துறையில் பணி செய்பவர் களுக்கு வரும் மூட்டு வலிகள் நிரந்தரமாகப் போக்கப்படு கிறது.

மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறையும்போது பலவித நோய்களும் நமது உடலை எளிதில் தாக்கி பாதிப்ப்பிற்குள்ளாக்க்குகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் சமநிலையில் வைத்திருக்கும்போது எந்த அலர்ஜியோ, எளிதில் வரும் சளி, இருமல் போன்ற நோயோ வர வாய்ப்பேயில்லை. ஆரோக்கியமாக வாழலாம்.


ஸோரியாஸிஸ், எயிட்ஸ், ஆஸ்துமா, கேன்ஸர், பெண்களுக்கான கற்பப்பை பிரச்சினைகள் உட்பட, மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு, சிறுநீரகம் பாதித்தவர்கள் போன்ற அனைத்து நோய்களையும் மிக அற்புதமாகக் குணப்படுத்தலாம் இன்ஷா அல்லாஹ். கற்பப்பையை அகற்ற அனுமதிக்காதீர்கள், அதனால் உங்களது உடலுக்கு மேலும் பற்பல தொந்தரவுகளைத் (தூக்கமின்மை, கை கால் வலி, இடுப்பு வலி etc.) தந்து கொண்டே இருக்கும் பிற்காலத்தில். ஆங்கில மருத்துவத்தில் அதற்கு தீர்வு இல்லாததால், கற்பப்பையை அகற்றக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அதை முழுமையாகக் குணப்படுத்தலாம் அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் இன்ஷா அல்லாஹ்.


மேற்கொண்டு விபரத்திற்கு:

மருத்துவர் சாதிக் - 09443389935 - நாகர்கோவில்.

Tuesday, May 5, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!



மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!

அதிரை POST

Monday, May 4, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்றைய தினம் நடந்த கலிமா அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் சகோதரர் CMN. Saleem அவர்களின் உரையின் பதிவை இங்கே கொடுத்துள்ளேன். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அன்புடன்,

தாருல்சபாவிலிருந்து சாதிக்.


Saturday, May 2, 2009