Sunday, May 17, 2009

"மதவாதத்தின் முன் நாங்கள் தோற்றுவிட்டோம்'

நாகர்கோவில், மே 16: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மதவாதத்தின்முன் நாங்கள் தோற்றுவிட்டோம் என, பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை காலையிலிருந்து மாலை வரையில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவரங்களை பொன். ராதாகிருஷ்ணன் அவ்வப்போது தெரிந்து கொண்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  இத் தொகுதியில் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் அத்தனைபேரும், கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக உழைத்தனர். இருந்தாலும்கூட மதவாதத்தின்முன் நாங்கள் தோற்றுப்போனதை ஒப்புக் கொள்கிறோம். யார் மதவெறியுடன் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு இப்போது புரியும்.  ஆனால், மத்திய, மாநில அரசுகளின் மதவிரோதப் போக்குக்கு எதிராக இம் மாவட்டத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உணர்வை அரசியல் கட்சிகளும், அரசுகளும் புறக்கணித்தால், ஜனநாயகத்தில் தோற்றுப்போன மக்கள் வேறுவிதமான நடவடிக்கைகளுக்கு தூண்டப்பட்டதாக ஆகிவிடும். எனவே, மதத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment