Wednesday, April 22, 2009

3 தொகுதிகளில் ம.ம.க., 37 தொகுதிகளில் தி.மு.க வுக்கு ஆதரவு -- பாப்புலர் ப்ரண்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தமிழ்நாடு மாநில பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அதன் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா செய்தி வெளியிட்டுள்ளார்..

தென் மாநிலங்களில் செயல்பட்டு வந்த தமிழகத்தின் மனித நீதி பாசறை, கேரளாவின் நேஷனல் டெவலப்ன்ட், கர்நாடக ஃபோரம் ஃபார் டிகினிட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து 2007 ல் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பை உருவாக்கின..

பின்னர் நேர்மரை அரசியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கேரளாவில் கடந்த பிப்ரவரி 2009 இல் லட்சக்கணக்கான மக்கள் பங்கெற்ற ஒரு மாபெரும் தேசிய அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது..

இந்த மாநாட்டில் ஆந்திரவின் ஆஸ்ஸோசியேசன் ஆஃப் சோசியல் ஜஸ்திஸ், கோவாவின் சிடின்ஸ் ஃபோரம், ராஜஸ்தானின் கம்யுனிடி சோசியல் அண்ட் எஜுகேசனல் ஸொஸைட்டி, மேற்கு வங்காளத்தின் நாகரிக் அதிகார் சுரக்ஷா ஸமிதி, மணிபூரின் லில்லாங் சோசியல் ஃபோரம் ஆகிய 5 மாநில அமைப்புகளும் தங்களை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் தங்களை இணைத்துகொண்ட பின் தற்போது 8 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் செயல்பட்டு வருகிறது..

தற்போது ஒடுக்கப்பட்ட பிற்டூத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக தேசிய அளவில் ஒரு புதியதோர் அரசியல் கட்சியினை பாப்புலர் ப்ரண்ட் உருவாக்கி வருகிறது..

இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் பாப்புலர் ப்ரண்ட் தேசிய அளவில் எந்த ஒரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை எனவும் அந்தந்த மாநில நிலவரத்தை பொறுத்து மாநில நிர்வாகம் முடிவு எடுக்கும் எனவும் முன்பே செய்தி வெளியிட்திருந்தது..

அதன் அடிப்படையில் கேரளாவில் 18 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் 2 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணியையும் ஆதரிப்பதாக கேரள மாநில பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
தலைவர்
நஸ்ருதின் செய்தி வெளியிட்டுள்ளார்..

தமிழகத்தில் கூட்டணிள் முடிவாகி இருக்கும் நிலையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் தெரியவரும்..

தமிழகத்தில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொல்லாச்சி ஆகிய 3 தொகுதிகளில் .. வுக்கும்மற்ற 37 தொகுதிகளில் தி.மு.. வுக்கும் ஆதரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான பத்திரிக்கை செய்தி ..





No comments:

Post a Comment