Friday, October 30, 2009

மராட்டிய தேர்தல்: 11 முஸ்லிம் வேட்பாளர்கள்

மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஐவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்;, மூவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள்,இருவர் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்கள், ஒருவர் ஜன் சூரியா சக்தி கட்சியைச் சேர்ந்தவர்; ஆவர். வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் விவரம்:
வ.எ
தொகுதி கட்சி
வெற்றிப் பெற்ற வேட்பாளர்
பெற்ற வாக்குகள்
1 மாவேகான் மத்தி
ஜன் சூரிய சக்தி
முப்தி முஹம்மது இஸ்மாயில் காலிக் 71157
2 வாந்த்ரே மேற்கு
காங்கிரஸ் ஜியாவுத்தீன் சித்தீக் 59659
3 மலத் மேற்கு காங்கிரஸ்
அஸ்லம் ஷேக் 51635
4 அணுசக்தி நகர் தேசியவாதி காங்கிரஸ் கட்சி நவாப் மாலிக் 38928
5 மும்பா தேவி காங்கிரஸ் அமீன் படடேல்
45285
6 பீவண்டி கிழக்கு சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி
37584
7 பீவண்டி மேற்கு சமாஜ்வாதி கட்சி அப்துல் ரசீத் தாஹிர் முமீன்
30825
8 சுhந்திவல்லி காங்கிரஸ் கான் முஹம்மது ஆரிப்
82616
9முன்குருத் சிவாஜிநகர்
சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி 38435
10 சிலோத் காங்கிரஸ் முஷ்ரிப் ஹஸன் 104241
11 சிலோத்
காங்கிரஸ் அப்துல் சத்தார் அப்துல் நபி 98131

மராட்டிய மாநிலத்தில் 1 கோடியே 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2001 அரசு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி மராட்டிய மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 10.6 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டிய சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் மக்கட் தொகையுடன் ஒப்பிடும் போது 31 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் 1952 முதல் 1999 வரை மராட்டிய சட்டமன்றத்தில் முஸ்லிம்களாக இருந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 9.5 ஆக மட்டுமே இருந்துள்ளது. 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் அது 12 ஆக உயர்ந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அபு ஆசிம் ஆஜ்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment