Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, March 3, 2009

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

அறிமுகம்

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)


  • பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் இந்திய தேசிய மக்கள் கட்சியிலும் உறுப்பினர் ஆகலாம்.

  • இந்திய மண்ணின் மைந்தர்கள், ஆதி தமிழர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தவர்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை மக்கள், சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டிற்கு இக் கட்சி குரல் கொடுக்கும்.

  • முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகளையும், தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய தொகுதிகளையும் கண்டறிந்து தூர நோக்கு சர்வே கணக்கின் அடிப்படையில் தகுதி வாய்ந்த பல்வேறு அமைப்பினராக இருந்தாலும் அவர்களை தேர்தலில் நிற்க வைத்து அவரின் திறமையையும் ஆற்றலையும் இந்திய தேசிய மக்கள் கட்சி பயன்படுத்திக் கொள்ளும்.
  • தமிழகத்தின் அனைத்து ஜமாத்துகள், சங்கங்கள், மதரஸாக்கள், அமைப்புகள் முதலியவற்றுக்கு சமூக ஒற்றுமையின் அவசியம், அரசியல் விழிப்புணர்வு சமூக நல்லிணக்க உறவு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.


  • தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகவும், வஞ்சிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகவும் செயல்படும்.

  • எல்லா சமூக மக்களையும் சென்று அடையும் விதத்தில் இன்றைய சமூகம் சார்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப வெளிவரும் பத்திரிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைவது. எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் ஒரு நாளிதழ் எல்லா சமூக மக்களையும் சென்றடையும் விதத்தில் நடத்த முயற்சி செய்வது.

  • வஞ்சிக்கப்பட்ட பல் சமய சமுதாய அமைப்புகளை அரவணைத்து சமூக, பொருளாதார அரசியல் மாற்றத்திற்கும், தமிழக பாரம்பரிய பண்பாடு காக்க பாடுபடும்.


  • தேச இறையாண்மை காக்க சமூக நல்லிணக்கம் மேலோங்க ஒத்த கருத்துகளை உள்ளடக்கிய மற்ற கட்சிகளுடனும் மற்றும் தலித் அரசியல் கட்சிகளிடையேயும் நல்லெண்ண உறவு வைத்து செயல்படும்.

  • சமூக நல்லிணக்கம், மனித நேயம், தமிழன் மதம் கடந்து மானுடத்தை பார்த்த பார்வை பற்றிய சிந்தனை நிலை, பல்வேறு தரப்பு மக்களிடம் நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காக்க கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வெளியிடும்.


முயற்சி மட்டுமே நம் செயல். கூலி இறைவனிடம். தனி நபர் முயற்சி மட்டுமே வெற்றிக்கு வழி கோலாது. வாருங்கள் ஒன்று படுவோம்! சிந்திப்போம்!! கடினமாக உழைப்போம்!!! வெற்றி பெறுவோம்!!!

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

சென்னை – 600 005

தமிழ்நாடு செல்: 9943802111, 9442815299,

9344520458, 9786011679, 9344510369