Wednesday, May 26, 2010
விமான விபத்து
விமான விபத்து
இருபத்தி ஐயாயிரம் உயரத்தில் பறந்து
இன்னும்
இரண்டு நிமிடங்களில்
இந்தியாவில்
இறங்கப் போகும் விமானம்
கனவுலகில் அனைவரும்
முப்பது வருடத்தை
துபாயில் தொலைத்துவிட்டு
முழுதாக வீடு திரும்பும் கனவோடு
குடும்பத்தலைவன்
பள்ளி விடுமுறையில்
பாட்டி தாத்தா
பார்க்க செல்லும்
பள்ளிச் சிறுவர்கள்
நாளை நடக்கவிருக்கும் தன்
திருமணத்திற்காக
நகைகளோடு பறக்கும்
இளம் வாலிபன்
முதல் குழந்தையை
முதல் முதல் பார்த்து
முத்தமிட துடிக்கும்
இளம் கணவன்
வருடாந்த விடுமுறையை
வசந்தமாக கழிக்க
குடும்பத்தோடு செல்லும்
குடும்பத்தலைவன்
படிப்பை முடித்துவிட்டு
பட்டத்துடன்
தாய், தந்தை, தங்கையை காப்பாற்ற செல்லும்
பொறுப்புள்ள மகன்
புது வேலையை
தக்க வைக்க
விசா மாற்ற செல்லும்
இளம் சாதனையாளன்
மருத்துவத்துக்காக
இந்தியா செல்லும்
மத்திய வயது
இதய நோயாளி
ஆபீஸ் வேலையாக
அவசரமாக புறப்பட்டிருக்கும்
இளம்
பொறியியலாளர்
புது வியாபாரத்தில்
பணத்தை புரட்ட
புறப்பட்டிருந்த
பக்கா வியாபாரி
கம்பீரத்தோடு
தன் பணியை செய்யும்
விமானிகளும்
சேவையாளர்களும்
ஒரு மூலையில்
ஒன்றுமே அறியாமல்
சத்தமிடும்
ஓர் சிறிய நாய் குட்டி
இரண்டு நிமிடம் கழிந்தது..........
ஒரு சிறு சத்தம்
விமானமும்
அனைத்து கனவுகளும்
தவிடு பொடி
அடுத்த சில நிமிடங்களில்.... புலம்பல்கள்
ஐயோ என் கணவர் நிரந்தரமாய் போய் விட்டாரே..
எனது பேரக் குழந்தைகளுக்கு ஏன் இந்த தண்டனை
மணமகனை எதிர் பார்த்த வீட்டில் மையத்து விழுந்து விட்டதே
பிறந்த குழந்தையை பார்காமலேயே போய் விட்டானே பாவி
ஐயோ என் வாரிசு முழுதையும் தொலைத்து விட்டேனே
எனது குடும்பத்தின் ஒரே ஆணி வேர் போய் விட்டானே
திறமையான வேலையாளை தொலைத்து விட்டோமே
மருத்துவத்துக்காக வந்தவருக்கே மரண தண்டனையா
பொருக்கி எடுக்கவா இந்த குழந்தையின் பாகங்கள்
துக்க தினம் பாடசாலை, கம்பனிகளிலும் முழு நாட்டிலும்
அடுத்த சில நிமிடங்களில்...
இன்னும் சிறிது நேரத்தில் துபாயிலிருந்து மங்களூரை நோக்கி விமானம் புறப்படும்
Please 'Fasten Your Seat Belt'
'நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமாக்கப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்த போதிலும் சரியே.
அல் குர்ஆன் - சூரா அந்நிஸா (4) - வசனம் 78
ஆக்கம்
அபூ அம்மாராஹ்
Labels:
விபத்து,
விமான விபத்து
Friday, May 14, 2010
மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள
மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும்
தொண்டு நிறுவனங்கள்
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை
அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை 688 , அண்ணா சாலை சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்
688 , அண்ணா சாலை சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்
117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்
ஜபார்ஷா தெரு,
திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை சென்னை - 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட் டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை மாண்டியத் சாலை எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால்
கீழத் தெரு
ராஜகிரி - 614 207
14. டாம்கோ
807 - அண்ணா சாலை
5 வது சாலை சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான்
Managing Director
Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
16. மியாசி புதுக் கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
17. S I E T கே.பி. தாசன் சாலை தேனாம்பேட்டை சென்னை - 18
அத்துடன் கடந்த ஆண்டுகளாய் கல்வியை தொடர முடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மணவிகளுக்கு ST Courier நிறுவனம் கல்விக்கு உதவி வருகிறது.
முகவரி
ST Courier
199, Hariyan Street, C.Pallavaram,
Chennai - 600 043.
Tamilnadu,
India.
TEL :91 44 22 666 666
TEL: 91 44 305 66 666
கல்வி உதவி சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் : jaffarkaan@gmail.com
நன்றி : ராஜகிரி கஸ்ஸாலி மற்றும் ஹீஸைன் கனி

education,
கல்வி உதவி,
பொது
Thursday, May 6, 2010
த.மு.மு.க வினர் 6 பேர் பலி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஊன்)

கரூர் : கரூர் அருகே, கார் மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர் உட்பட, ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). மனிதநேய மக்கள் கட்சி நீலகிரி மாவட்ட செயலர். இவருடன், ஊட்டி நகர செயலர் சையது சாதிக் (37), நிர்வாகிகள் அப்துல் கனி (42), யாசான் (22), மஸ்தீன் (32), சபியுல்லா (32) ஆகியோர், நேற்று முன்தினம், ஹூண்டாய் சான்ட்ரோ காரில், ஊட்டியிலிருந்து திருச்சி சென்றனர். பின், மீண்டும் ஊர் திரும்பும்போது, நேற்று காலை 10.30 மணியளவில், மயிலம்பட்டியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில், சரசம்பட்டி என்ற இடத்தில் வந்த போது, பாளையத்திலிருந்து அரியலூருக்கு ஜல்லிச் ஏற்றி சென்ற, டாரஸ் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில், பல அடிதூரம் இழுத்து செல்லப்பட்ட கார், அப்பளம் போல் நொறுங்கியதுடன், சாலையோர பள்ளத்தில் தள்ளப்பட்டது. நிலைதடுமாறிய லாரியும் கவிழ்ந்தது. லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு படையினர், காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர்
Saturday, March 6, 2010
உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!
தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள் அவர்கள் தயாரித்த கணக்கெடுப்பு பற்றிய பட்டியலை கீழே தந்திருக்கிறோம். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள். அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.
இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.
இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.
நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா
Labels:
இந்து பயங்கரவாதம்,
பொது
Sunday, February 14, 2010
மனித உரிமைகள் கழகம் - முப்பெரும் விழா
டாக்டர். சுரேஸ் கண்ணன், ஆசிரியர் பாரத ராஜா, திரு. செந்தில் செல்வானந்த், திரு. செந்தில்நாதன் ஆகியோர் மனித உரிமைகள் கழகம் - முப்பெரும் விழா
பிப்ரவரி 14, இராமநாதபுரம் மாவட்டம், தேர்போகி கிராமத்தில் மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் மாவட்ட தலைவர் திரு. செந்தில் செல்வானந்த் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் தலைவர் டாக்டர் சுரேஸ் கண்ணன் M.A., B.L., M.Phil., M.Ed, HDCM., Ph.D., அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் பொதுச்செயலாலர் திரு. ஜெயபாலன் அவர்கள், மனித உரிமைகள் மாத இதழ ஆசிரியர் திர. பாரதராஜா அவர்கள், மாநில அமைப்பாளர் விளையாட்டு பிரிவு திரு. செந்தில் அவர்கள், திரு. சுப. முருகேசன் அவர்கள் மற்றும் மாநில கமான்டன்ட் இணைத் தலைவர் திரு. தாஜீதீன் ஆகியோர் சிறப்ப அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இடமிருந்து பொதுச்செயலாலர் திரு. ஜெயபாலன், சர்வதேச தலைவர் டாக்டர் சுரேஸ் கண்ணன், பத்திரிகையாளர் திரு முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன், மாநில அமைப்பாளர் விளையாட்டு பிரிவு திரு. செந்தில், ஆசிரியர் திரு. பாரதராஜா ஆகியோர் மேடையில்
மனித உரிமைகள் மாத இதழின் மாவட்ட நிருபர்கள் திரு. தலிப்குமார் அவர்கள், திரு. முகம்மது ரைசுதீன், திரு. சீனிவாசன், முகவை மாவட்ட பொருப்பாளர் (கிழக்கு) திரு. சித்திக் அலி அவர்கள், நகர அமைப்பாளர் திரு. அபுபக்கர், இனை அமைப்பாளர் திரு. முஸ்த்தபா ஆகியோர் முன்னிலை வகித்து வாழத்துரை வழங்கினர்.
நிகழச்சிக்கான ஏற்ப்பாடுகளை தேர்போகி திரு. செந்தில்நாதன், இராமநாதபுரம் ஒன்றிய துனை அமைபடபாளர் செய்திரந்தார். நிகழச்சியில் ஊர் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பில் இணைவதற்கு அழைக்கவும் 9443138255, 9865695105, 9843252802,9962337907.
செய்திகள் : முகவைத்தமிழன்
Labels:
hro,
human rights,
அரசியல்,
சர்வதேச மனித உரிமைகள் கழகம்,
பொது
Saturday, February 13, 2010
"இஸ்லாத்தின் பார்வையில் **காதல்**"
காதல் வயப்பட்டவர்கள் கட்டாயம் காண வேண்டியே வீடியோ..இஸ்லாத்தின் பார்வையில் காதலைப் பற்றி விளக்குகின்றார் மார்க்க அறிஞர் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்.
"இஸ்லாத்தின் பார்வையில் **காதல்**"
மெளலவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்
Al-Sheikh. Ismail Salafi
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்
தமிழ் முஸ்லிம் மீடியா
தமிழ் முஸ்லிம் மீடியா
Labels:
love,
VALENTINE’S DAY,
திரைப்படம்,
நிகழ்வுகள்
காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
காதலர் தினம்
தமிழாக்கம் - சகோ.அபு இஸாரா
சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக...
சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...!
அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:
உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...
காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.
1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும்.
2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.
3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.
காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.
நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.
عيد الحب
فضيلة الشيخ محمد بن صالح العثيمين حفظه الله
السلام عليكم ورحمة الله وبركاته وبعد
فقد انتشر في الآونة الأخيرة الاحتفال بعيد الحب ــ خاصة بين الطالبات ــ وهو عيد من أعياد النصارى ، ويكون الزي كاملاً باللون الأحمر الملبس والحذاء ويتبادلن الزهور الحمراء ..00
نأمل من فضيلتكم بيان حكم الاحتفال بمثل هذا العيد ، وما توجيهكم للمسلمين في مثل هذه الأمور والله يحفظكم ويرعاكم
بسم الله الرحمن الرحيم
ج / وعليكم السلام ورحمة الله وبركاته
.الاحتفال بعيد الحب لا يجوز لوجوه :
الأول : أنه عيد بدعي لا أساس له في الشريعة .
الثاني : أنه يدعو إلى العشق والغرام
الثالث: أنه يدعو إلي اشتغال القلب بمثل هذه الأمور التافهة المخالفة لهدي السلف الصالح رضي الله عنهم
.فــلا يــحـل أن يحدث في هذا اليوم شيء من شعائر العيد سواء كان في المآكل أو المشارب أو الملابس أو التهادي أو غير ذلك وعلى المسلم أن يكون عزيز بدينه ولا يكون إمَّــعَــةً يتبع كل ناعق . أسأل الله تعالى أن يعيذ المسلمين من كل الفتن ما ظهر منها وما بطن وأن يتولانا بتوليه وتوفيقه .
كتبه
محمد الصالح العثيمين
في 5/11/1420هـالتوقيع
VALENTINE’S DAY
Shaykh Ibn Uthaymeen (may Allah have mercy on him) was asked:
Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu…
In recent times the celebration of Valentine’s Day has become wide spread, especially among female students. It is a Christian festival where people dress completely in red, including clothes and shoes , and they exchange red flowers. We hope that you can explain the ruling on celebrating this festival, and what your advice is to Muslims with regard to such matters; may Allah bless you and take care of you.
He replied :
Wa Alaikum Salam Wa Rahmathullahi Wa Barakathuhu…
Celebrating Valentine’s Day is not permissible for a number of reasons.
1. It is an innovated festival for which there is no basis on Islam.
2. It promotes Love and Infatuation.
3. It calls for hearts to be preoccupied with foolish matters that are contrary to the way of the righteous (may Allah be pleased with them).
It is not permissible on this day to do any of the things that are the characteristic of this festival, whether that has to do with food, drinks, clothing exchanging gifts or anything else.
The Muslim should be proud of his religion and should not be a weak character who follows every Tom, Dick and Harry. I ask Allah to protect the Muslims from all temptations, visible and invisible, and to protect us and guide us.
வெளியீடு : அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
வெளியீடு : அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
Thanks to : Islamic Call & Guidence Centre - Al Khobar,Saudi Arabia Tel. +96638655557
Labels:
VALENTINE’S DAY,
عيد الحب,
காதலர் தினம்
Sunday, February 7, 2010
போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........
அஸ்ஸலாமு அலைக்கும்,

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........
அன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார் ,
மனைவி இருக்கிறாள் - நானும் இருக்கிறேன்
வெகு தொலைவில்!
அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை
தொட்டு தடவி பார்த்தேன்
புகைப்படத்தில்!
மழலையின் குரலை கைபேசியில் கேட்டு
கதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக
சத்தமே இல்லாமல்!
எதிர் திசையில் இருந்து ஒரு குரல்,
அட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு!
எல்லோரிடமும் பேசினேன்-எல்லோருக்கும்
என் குழந்தையை பற்றியே பேச்சு ,
சந்தோசத்தில்!
கடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள் " எப்போ வருவிங்க"!!
என் குரல்வளையில் யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலே கேட்க முடியவில்லை!
கனைத்து விட்டு பின்பு சொன்னேன்
உங்களுக்காகத்தானே ! - போய்விடலாமா
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம் என ஆறுதல் சொன்னது என் மனம்!!!
கடைசியாக முடிவு எடுத்தே விட்டேன் நான்,
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது - காரணம்
கம்பெனியில் முடிந்து விட்டது என் வயது வரம்பு!
ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!
என் இளமையெல்லாம் பாலைவனத்தில் விட்டு விட்டு
வீடு திரும்பினேன்
விழி பிதிங்கினேன் களவு கொடுத்த கணவனாய்!!!
புகைப்படத்திலே பார்த்து பார்த்து பழகிய
என் பிள்ளைகள் , இப்போதும் பார்கிறார்கள்
அப்படியே !
தூரத்தில் வைத்து.......
கண்களில் பிரகாசத்தோடு
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை,
உள்லிருந்து என் மனைவியின் குரல்
போகமாட்டார்கள் புது ஆளிடம்....
???????
-யாசர் அராபத்.
Saturday, December 19, 2009
முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை
டெல்லி: மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும், மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீடும் வழங்கலாம் என முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரைள்ளது.
முஸ்லீம்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 2004ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷனின் சமீபத்தில் அரசிடம் தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையை நேற்று மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இதர மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.
அனைத்து மதங்களிலும் உள்ள தலித்துகளையும் ஷெட்யூல்டு கேஸ்ட் பட்டியலில் சேர்க்க வேண்டும். (இதன்மூலம் இஸ்லாமிய, கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித்துகளும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்).
குறிப் பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அல்லது ஏதாவது ஒரு பணிக்கு முஸ்லீம் விண்ணப்பதாரர்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், அந்த பின்னடைவு இடங்களை மற்ற சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு-கமிஷனில் கருத்து வேறுபாடு:
இந் நிலையில் இந்த கமிஷனின் உறுப்பினரான ஆஷா தாஸ், கமிஷனின் பரிந்துரைகளில் மாறுபட்டு சில பரிந்துரைகளை அளித்துள்ளார்.
மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்.சிகளுக்கான சலுகைகள் வழங்கக்கூடாது. வேண்டுமானால் பிற்பட்டோர் பிரிவினருக்குரிய சலுகைகளை வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் வரவேற்பு-பாஜக எதி்ர்ப்பு:
இந்த கமிஷன் அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,
மிக வும் நுட்பமாக ஆய்ந்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வரவேற்கத்தக்கவை.
இந்த பரிந்துரைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தி அதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்,
ரங் கநாத் மிஸ்ரா பரிந்துரைகள், மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. மேலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை இந்த பரிந்துரைகள் பாதிக்கும். இந்த பரிந்துரை நாட்டுக்கு பயனற்றது என்றார்.
ஜைன மதத்தினர் கோரிக்கை:
இந் நிலையில் நாட்டில் பல்வேறு சமூகத்தினர் தங்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துகளைக் கோரியுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறுபான்மையினர் பட்டியலில் தற்போது முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிருஸ்துவர்கள் மற்றும் புத்த மதத்தினர் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே உள்ளனர்.
ஆனால், ஜைன மதத்தினரும் (ஜெயின்கள்) தங்களை இதில் சேர்க்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இட ஒதுக்கீடு,
மிஸ்ரா கமிசன்
Wednesday, November 11, 2009
வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

கேள்வி பதில்,
சமூகம்,
முத்துப்பேட்டை இணையதளம்
Subscribe to:
Posts (Atom)