
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர தமுமுக சார்பில் 55வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது.
20.02,2009 அன்று வந்தவாசி கோட்டை மூலையில் மவ்லவி அப்துல் ரஹீம் திடல் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட தமுமுக தலைவர் சகோ அப்துல் ஹமீது தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில், தமுமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான சகோ செ. ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சகோ பி, அப்துல் சமது, தமுமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் சகோ கோவை செய்யது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் ஆம்புலன்ஸ் என்னும் அவசர ஊர்தியினை தமுமுக பொதுச் செயலாளர் சகோ, செ, ஹைதர் அலி அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்ப்பணித்தார். இதில் திருவண்ணாமலை மாவட்ட மற்றும் வந்தவாசி நகரம் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.